எனக்கு தெரியாது... தெரியாம கையெழுத்து போட்டுடேன்.... கரூர் வழக்கு குறித்து செல்வராஜ் விளக்கம்...!
கரூர் சம்பவம் தொடர்பாக போலி வழக்கு தொடரப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து செல்வராஜ் விளக்கம் அளித்தார்.
கரூர் சம்பவத்தை தமிழக அரசு விசாரிக்கக் கூடாது என்றும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ விசாரணை கேட்கட்டும் என்றும் உங்கள் அரசியலுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர். விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் மனுக்களை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதை அடுத்து சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகம் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது பொய் வழக்கு என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
செல்வராஜ் என்பவர் தரப்பில் அவரது அனுமதி இன்றி வழக்கு தொடர்ந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ க்கு மாற்றுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக செல்வராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: எப்படி கிரிமினல் வழக்காச்சு? எதையும் சரியாக விசாரிக்கல… சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்…!
தான் தெரியாமல் கையெழுத்து போட்டு விட்டதாக அவர் கூறியுள்ளார்.ஊடகங்களை அழைத்து பேசுவதற்கு ஏன் தயார் இல்லை, யாரும் மிரட்டி கட்டாயப்படுத்தியதால் இப்படி கூறுகிறீர்களா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது இல்லை என்று தெரிவித்தார். செல்வராஜ் பேசிக் கொண்டிருந்த போதே காரை எடுப்பதில் ஓட்டுநர் அவசரம் காட்டினார். மேலும் உங்களை யார் இங்கு வர சொன்னது என்று காரின் பின்னால் அமர்ந்திருந்தவர் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் கோரச் சம்பவம்... தமிழக அரசுக்கு 8 வாரம் தான் டைம்... உச்ச நீதிமன்றம் உத்தரவு...!