களைக்கட்டுது ஈரோடு… விஜய் பார்க்க QR CODE, பாஸ் தேவையே இல்லை… செங்கோட்டையன் அறிவிப்பு…!
விஜய் மக்கள் சந்திப்புக்கு அனுமதிச்சீட்டு தேவையில்லை என செங்கோட்டையன் தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் பயணிக்க தொடங்கிவிட்டன. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நடத்துகிறார். தமிழக அரசியலில் புதிய அலை என்று கூறப்படும் விஜய் மிக தீவிரமாக பிரச்சாரம் நடத்தி வந்தார். கரூர் சம்பவம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இந்த நிலையில் அதிலிருந்து மீண்ட விஜய், மீண்டும் தனது மக்கள் சந்திப்பை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்துகிறார். புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நடத்தி இருந்தார் விஜய். நாளை ஈரோடு மாவட்டத்தில் விஜய் மக்கள் சந்திப்பு நடத்துகிறார். அதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர எற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் மாவட்ட எஸ்பி சுஜாதா நேரில் ஆய்வு மேற்கொண்டார். காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியான நிலையில் விஜய் நிகழ்ச்சிகளில் போலீசார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த ஆய்வின்போது செங்கோட்டையன் உடன் இருந்தார்.
தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில் இது தொடர்பாக செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். விஜயின் பிரச்சாரத்திற்கு வருபவர்களுக்கு qr கோடு, பாஸ் தேவையில்லை என்று தெரிவித்தார். பொதுமக்கள் தாங்களாகவே பங்கேற்கலாம் என்றும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் தான் முதல்வர் வேட்பாளர்... கூட்டணிக்கு வாங்க... செங்கோட்டையன் அழைப்பு...!
விஜயின் பிரச்சாரத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும் விளக்கம் அளித்தார். தமிழக வெற்றி கழகத்தில் மத்திய அரசியல் கட்சியினர் யாராவது இணைய வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு கழகத்தில் இணைக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கான முறைகள் இருக்கிறது என்றும் நாளை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2026ல் விஜயை முதல்வர் ஆக்கணும்..! தவெக ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்...!