தமிழகம் இதுவரை கண்டிராத வகையில்... ஈரோடு விஜய் பிரச்சாரம் குறித்து செங்கோட்டையன் கொடுத்த சூப்பர் அப்டேட்...!
பாதுகாப்பு அடிப்படையில் என்னென்ன தேவை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளாரோ அனைத்தும் நாளை மதியத்திற்குள் நிறைவு செய்யப்படும்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாளை மறுதினம் மக்கள் சந்திப்பு பரப்புரை நடத்த உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்த பணிகளை தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதன் பின்னர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாதுகாப்பு அடிப்படையில் என்னென்ன தேவை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளாரோ அனைத்தும் நாளை மதியத்திற்குள் நிறைவு செய்யப்படும், 40 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அவசர தேவைக்காக 40 வாக்கிடாக்கி பயன்படுத்தப்படும். 24 ஆம்புலன்ஸ்கள், 72 மருத்துவர்கள், 120 செவிலியர்கள் அனைத்து வசதிகளுடன் பணியில் இருப்பர்.
20 சின்டெக்ஸ் டேங்குகள் தண்ணீர் கொடுக்கப்படும். பாட்டிலில் அனைவருக்கும் தண்ணீர் வழங்கப்படும். கழிவறைகள் 20 இடங்களில் அமைக்கப்படும். மூன்று தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளன. 60 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக 20 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நிபந்தனைகளை மீறினால்... பெரியார் மண்ணில் இருந்து விஜய்க்கு பறந்த எச்சரிக்கை... கட்டுப்பாடுகளை தாக்குப்பிடிக்குமா தவெக?
தமிழகம் இதுவரை கண்டிராத அளவிற்கு பாதுகாப்புடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். தமிழ்நாட்டிற்கு முன்மாதிரியாக இது அமையும். கட்சியினர் 10 ஆயிரம் பேரும், பொதுமக்கள் 25 ஆயிரம் பேரும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள். வருவர்களுக்கு யாருக்கும் பாஸ் கிடையாது. வருபவர்கள் அனைவரும் விஜயை பார்த்து செல்லலாம்.16 இடங்களில் உள்ளே வந்து செல்வதற்கு இடம் விடப்பட்டுள்ளது என்றார்.
விஜய்க்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?
பிரச்சார வாகனத்தைச் சுற்றி நான்கு புறமும் மக்களுக்கும் வாகனத்துக்கும் இடையே 50 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். பொதுமக்கள் உள்ளே செல்வது மற்றும் வெளியே வருவது குறித்த வரைபடத்தைத் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும். தள்ளுமுள்ளு ஏற்படாத வகையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தன்னார்வலர்களை ஏற்பாடு செய்ய வேண்டும். மனுவில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் மக்களை அனுமதிக்கக் கூடாது.
மேலும், மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸ் வசதி செய்ய வேண்டும். எத்தனை மருத்துவக் குழுக்கள், எத்தனை ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படும் என்பது குறித்த விவரங்களை அளிக்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள், எல்இடி திரைகளின் எண்ணிக்கை விபரங்களையும் தெரிவிக்க வேண்டும். அவசர காலத்தில் தீயணைப்பு வாகனங்களும் ஆம்புலன்ஸ்களும் வந்து செல்ல தனி வழி ஏற்பாடு செய்ய வேண்டும். மின் கம்பங்கள், மரங்கள், உயரமான கட்டடங்கள், விளம்பர போர்டுகள் மீது தொண்டர்கள் ஏறி நிற்கக் கூடாது உள்ளிட்ட 84 கட்டுப்பாடுகளை ஈரோடு காவல்துறை தமிழக வெற்றிக் கழகத்திற்கு விதித்துள்ளது.
இதையும் படிங்க: விஜய்க்கு விதிக்கப்பட்ட 84 நிபந்தனைகள்!! கறார் காட்டும் ஈரோடு போலீஸ்! பின்னணியில் யார்?!