நயினார் எல்லாம் ஒரு ஆளா? பாஜக- லாம் ஒரு கட்சியா? விஜய் பற்றிய விமர்சனத்திற்கு செங்கோட்டையன் பதிலடி..!
நயினார் நாகேந்திரனின் விஜய் குறித்த விமர்சனத்திற்கு செங்கோட்டையன் பதிலடி கொடுத்தார்.
நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா என்றும் பாஜக எல்லாம் ஒரு கட்சியா எனவும் செங்கோட்டையன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். விஜய் தொடர்பான விமர்சனத்துக்கு இவ்வாறு பதிலடி கொடுத்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசியபோது நடிகர் விஜய்யை விமர்சிக்கும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
விஜய் சேலத்தில் நடத்திய கூட்டத்தில் அரசியல் கட்சிகள் குறித்து பேசியதற்கு பதிலடியாக, நயினார் நாகேந்திரன் பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷா கிட்ட இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடக்க முடியும் என்று கூறினார். இந்த கருத்து நடிகை திரிஷாவின் பெயரை தனிப்பட்ட வாழ்க்கை சூழலுடன் இணைத்து, அவதூறாகவும் அநாகரிகமாகவும் பார்க்கப்பட்டது.
இந்த பேச்சு உடனடியாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இதை அரசியல் விமர்சனத்தின் எல்லையை மீறிய செயலாக கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, பெண்ணொருவரின் பெயரை இழுத்து அரசியல் எதிரியை தாக்குவது தரம் தாழ்ந்தது என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இதையும் படிங்க: திரிஷா பற்றி நைனாரின் அநாகரிக விமர்சனம்... அடிப்படை அறிவை இழந்துவிட்டார்.. நாஞ்சில் சம்பத் கண்டனம்..!
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் குறித்து அநாகரிகமாக பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கொடுத்துள்ளார். பாஜக எல்லாம் ஒரு கட்சியா என்று கேள்வி எழுப்பினார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா என்று கேட்டார்.
இதையும் படிங்க: அவ்ளோ முட்டாள் இல்ல. ! DMK மோசடி வலையில் மகளிர் சிக்க மாட்டார்கள்..நயினார் உறுதி..!