×
 

செங்கோட்டையனுக்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு வாபஸ்... விஜய் எடுத்த அதிரடி முடிவு...!

தவெகவில் இணைந்த செங்கோங்கோட்டைனுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கி செயல்படுத்திய, அதிமுக, பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு, அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், கோவை மாவட்டம், அன்னுார் அருகே பாராட்டு விழா நடந்தது. இதில், அதிமுக., முன்னாள் அமைச்சரும், அப்போதைய கோபி எம்எல்ஏ-வுமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. 

'எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா படங்கள், அதற்கான விழா அழைப்பிதழ், பிளக்ஸ் பேனர், டிஜிட்டல் போர்டுகளில் இடம் பெறவில்லை. பாராட்டு விழாவுக்கு செல்லவில்லையே தவிர, பழனிசாமியை புறக்கணிக்கவில்லை' என, விளக்கம் அளித்திருந்தார். 

இதனால் அதிமுகவில் பெரும் பதற்றம் நிலவியது. எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்ததால், கடந்த பிப்ரவரி மாதம் ஈரோடு மாவட்டம், கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் பண்ணை வீட்டுக்கு, ஒரு எஸ்.ஐ., தலைமையில், துப்பாக்கி ஏந்திய இரு போலீசார் நேற்றிரவு முதல் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்...!! கரூர் வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது... தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்...!

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் எழுப்பிய செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த 26ம் தேதி சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்த செங்கோட்டையன், அடுத்த நாளே பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய சந்தித்து அவரது கட்சியில் ஐக்கியமானார். செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது அரசியலில் தினந்தோறும் புதுப்புது பரபரப்புகளை கிளப்பி வரும் நிலையில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு வழங்கப்பட்ட ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. அவரது வீட்டிற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில் கே.ஏ.செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததை தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. அதே நேரத்தில் அவருக்கு வட இந்திய பவுன்சர்கள் இருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜயை முதலமைச்சராக்க உயிர் மூச்சு உள்ளவரை பணியாற்றுவேன்… செங்கோட்டையன் திட்டவட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share