இப்படியே போனா முழுநிலவு அமாவாசை ஆகிடும்… நிர்வாகிகள் நீக்கம் குறித்து செங்கோட்டையன் சாடல்…!
இப்படியே நிர்வாகிகளை நீக்கி கொண்டிருந்தால் முழு நிலவு தேய்ந்து அமாவாசை ஆகிவிடும் என்று செங்கோட்டையன் விமர்சித்தார்.
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 45 வயதுக்கு உட்பட்டோர் மட்டும்தான் பூத் கமிட்டியில் இருக்க வேண்டும் என கூறியவர் ஈபிஎஸ் என்றும் உழைத்தவர்களுக்கு அவர் வாய்ப்பளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
அதிமுகவிற்கு தொடர்ந்து உழைத்தவர்களுக்கு கட்சி பதவிகளில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார். அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் எடப்பாடி பழனிச்சாமி தன்னிடம் பேசி இருப்பார் என்றும் தன்னை சுற்றி இருப்பவர்களை பலவீனமடைய செய்யும் போது அவர்களும் பலவீனம் அடைகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
நிர்வாகிகளை நீக்கிக் கொண்டிருந்தால் முழு நிலவு தேய்ந்து அம்மாவாசை ஆகிவிடும் என செங்கோட்டையன் கூறினார். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னால் இருந்த போதும் என்னிடம் அவர் பேச தயாராக இல்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் l, மருமகன் உள்ளிட்ட உறவினர்கள் தற்போது அதிமுகவை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் எனவும் கூறினார். நாமக்கல்லில் தமிழக வெற்றிக்கழக கொடி பறந்த போது பிள்ளையார் சுழி போட்டு விட்டார்கள் என்று இபிஎஸ் பேசியதாகவும் ஆனால் இப்போது தமிழக வெற்றிக்கழகம் என்ன நிலைப்பாடு எடுத்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: செஞ்ச தப்புக்குதான் ஓபிஎஸ் இப்ப அனுபவிக்கிறாரு... பூந்து விளாசிய வைகோ...!
ஒருவர் முன்னேற வேண்டுமென்றால் தன் காலிலே சுயமாக நடக்க வேண்டும் என்று கூறிய செங்கோட்டையன் பிறர் முதுகில் ஏறி சவாரி செய்யக்கூடாது என்று விமர்சித்தார். பாஜக தன்னை அழைத்து அதிமுக - பாஜக இணைய வேண்டும் எனக் கூறியதாகவும் நானும் அதையே தான் கூறினேன் என்றும் தெரிவித்தார். என்னை அழைத்து அதிமுக மீண்டும் ஒன்றிணை வேண்டும் என பாஜக பேசியதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: இப்படியே போனா அதள பாதாளத்திற்கு சென்று விடும்! குமுறிய இபிஎஸ்...!