விஜய் முதல்வராக இருக்கும் வரை! மேகதாது அணை கட்ட ஒரு செங்கல் கூட வைக்க முடியாது! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!
''தமிழக முதல்வராக விஜய் இருக்கும் வரை, மேகதாது அணை கட்ட முடியாது; தமிழக முதல்வராக விஜய் இருக்கும் வரை, மேகதாது அணை கட்ட முடியாது'' என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழக முதல்வராக விஜய் இருக்கும் வரை கர்நாடக அரசு மேகதாது அணையை கட்ட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக தமிழக பிரதிநிதிகள் கர்நாடகா செல்வது வழக்கமான நடைமுறை என்றும், இதற்கு முன்பும் தமிழக அரசியல் தலைவர்கள் கர்நாடகா சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு மற்றும் விவசாய அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் மேகதாது அணை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: கரூர்ல நடந்தது என்ன? உதவியது யார்? ஓடியது யார்?! முதல்வர் விஜய்க்கு செந்தில்பாலாஜி பதிலடி!
"மேகதாது அணை விவகாரத்தில் எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தின் நலன் பாதிக்கப்பட அனுமதிக்க முடியாது. தமிழக முதல்வராக விஜய் இருக்கும் வரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்க முடியாது. மேகதாது அணை கட்ட முடியாது" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். நிலத்தடி நீர் வளம் உள்ள பகுதிகள் குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதற்கான ஏற்பாடுகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் என்றும் செங்கோட்டையன் கூறினார்.
காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தமிழகம்-கர்நாடகா இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் நிலையில், அமைச்சர் செங்கோட்டையனின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மேகதாது அணை விவகாரம் தமிழக அரசியல் களத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: என் புள்ளையை வளர்த்து பறிகொடுத்தது நானு!! இன்னொருத்தி கூட போன புருசனுக்கு அரசு வேலையா? தவிக்கும் தாய்!