250 பக்கம்... எல்லாமே சீக்ரேட்... எடப்பாடி தலையில் இடியை இறக்கிய செங்கோட்டையன்...!
தேர்தல் ஆணையத்திற்கு உள்ள கடிதம் குறித்து செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்து அதிமுகவில் பரபரப்பை கிளப்பியுள்ளது
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாக கூறும் அதிமுகவின் பிரிவு உண்மையில் அக்கட்சி அல்ல என்றும், கட்சியின் உண்மை நிலை என்னவென்பதை நிரூபிக்க கால அவகாசம் தேவை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்து எடப்பாடி ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக உண்மையான அதிமுக இல்லை என சொல்லி இருப்பது எந்த அடிப்படையில் என்ற கேள்விக்கு "பின்னால் இருகுறித்து தெரிந்து கொள்வீர்கள்" என்றார். என்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்றார்.
இரட்டை இலை சின்னம் குறித்து விசாரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு "நல்லதே நடக்கும்" என்றார்.
இதையும் படிங்க: பெண்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே... கோவையில் அதிமுகவினர் நூதன விழிப்புணர்வு...!
தேர்தல் ஆணையத்திடம் என்ன மாதிரியான கோரிக்கைகள் வைத்து இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, 250 பக்கம் இருக்கிறது. அதை எப்படி சொல்ல முடியும். அதில் முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. அதை வெளியில் சொல்ல முடியாது. தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்து இருப்பதை வெளியில் சொல்லக்கூடாது என விதிகள் இருக்கிறது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இபிஎஸ் பிரிவு உண்மையான அதிமுகவே இல்ல... குண்டை தூக்கி போட்ட செங்கோட்டையன்! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த கடிதம்...!