×
 

வைரல் வீடியோ...!! “இதையெல்லாம் வேற எங்கேயாவது வச்சிக்கோ” - கூட்டத்திற்குள் வைத்து செங்கோட்டையனை அசிங்கப்படுத்திய தவெக தொண்டர்கள்...!

தமிழக வெற்றிக் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை சூழ்ந்து கொண்டு தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் பரபரப்பான வீடியோ வைரலாகி வருகிறது.

முதல் முறையாக கொங்கு மண்டலத்தில் கால் பதித்துள்ள விஜய்க்காக இரவு, பகலாக பம்பரமாய் சுழன்று வேலை பார்த்த தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் விஜய்க்கு இப்படியொரு அவமானம் நேரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி விஜய்-ன் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பாக கரூர் வேலூச்சாமிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பின் போது கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பிறகு கப்சிப் என அமைதியாக இருந்த தமிழக வெற்றிக் கழகம், கிட்டத்தட்ட 2 மாதத்திற்கு பிறகு புதுச்சேரியில் மக்கள் சந்திப்பை நடத்தியது. 

இதற்கான அனைத்து ஏற்பாடுகளை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கவனித்துக் கொண்டார். முதலில் ரோடு ஷோவிற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், விஜயைக் காண அதிகம் கூட்டம் கூடும் கரூரை விட பயங்கரமான உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் அமைதியான புதுச்சேரி அரசு, ரோடு ஷோவிற்கு அனுமதி  தர முடியாது என மறுத்தது. 

இதையும் படிங்க: சொன்னா கேளுங்கய்யா... விஜய் வாகனத்தை துரத்திச் சென்றபோது விபத்து...!

முதலமைச்சர் ரங்கசாமியையே நேரில் சந்தித்தும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தால் அனுமதி பெறவில்லை. இறுதியாக பொதுக்கூட்டம் வேண்டுமானால் நடத்திக்கொள்ளுங்கள் என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் புஸ்ஸி ஆனந்த் மீது கடும் அப்செட்டில் இருந்த விஜய், ஈரோடு மக்கள் சந்திப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனிடம் ஒப்படைத்தார். 

ஈரோடு மக்கள் சந்திப்பிற்கு அனுமதி பெறுவது முதல் விழாவிற்கான இடத்தை பக்காவாக தயார் செய்வது வரை பிசிறு இல்லாமல் செய்து முடித்த செங்கோட்டையன், அவ்வப்போது பொதுக்கூட்டம் நடக்கவிருந்த விஜயமங்கலத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வந்தார். அப்படி நேற்று தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் ஆய்வு மேற்கொள்ள சென்ற போது அங்கிருந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இருக்கிறார் என்ற மரியாதை கூட இல்லாமல், அவரை சூழ்ந்து கொண்டே கட்சி தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “இதையெல்லாம் வேற யாருகிட்டையாவது போய் வச்சிக்கோ” என ஒருவரை ஒருவர் கடுமையாக திட்டிக்கொண்டும், சரமாரியாக அடிக்க பாய்ந்ததும் செங்கோட்டையனையே ஷாக் ஆக்கியுள்ளது. தவெக தொண்டர்கள் மோதலுக்கு இடையே செய்வதறியாது செங்கோட்டையன் சிக்கித் தவிக்கும் காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: நான் பேசுனா சினிமா டயலாக்காம்… CM சிலப்பதிகாரத்துல இருந்து பேசுனாரா? நக்கலடித்த விஜய்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share