#BREAKING: தவெகவில் ஏன் இணைந்தேன்... உண்மையைப் போட்டு உடைத்து செங்கோட்டையன்...!
தமிழக வெற்றி கழகத்தில் ஏன் இணைந்தேன் என்று செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.
தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தன்னைவிடாமல் பின்தொடர்ந்து ஊடகப் பணியாற்றிய அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தான் புரட்சித் தலைவரால் அடையாளம் காட்டப்பட்டவன் என்றும் 1972ல் இந்த இயக்கம் துவங்கிய போது தலைவருக்கு பின்னால் நின்ற தொண்டர்களில் தானும் ஒருவர் என்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் இயக்கப்பட்டு 1975 ஆம் ஆண்டு தனக்கு முழு பொறுப்பு கொடுத்தார்கள் என்று தெரிவித்தார்.
எம்ஜிஆர் பாராட்டும் அளவிற்கு அந்த பணிகளை முடித்து காட்டினோம் என்று கூறினார். தன்னை கட்டிப்பிடித்து எம்ஜிஆர் பாராட்டியதாக தெரிவித்தார். அதிமுக இரண்டாக பிரிந்த போது ஜெயலலிதா தலைமையில் பணியை மேற்கொண்டதாக கூறினார்.
ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மூன்று கூறுகளாக அதிமுக என்ற இயக்கம் பிரிந்தது என்றார். தற்போது கழகம் அப்போது இருந்தது போல இல்லை என்று தெரிவித்தார். பசும்பொன் சென்று திரும்பி அதிமுகவிலிருந்து தான் நீக்கப்பட்டதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாத தன்னை சார்ந்து இயங்கியவர்களும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக குறிப்பிட்டார். துக்கம் விசாரிக்க சென்றவரை கூட கட்சியில் இருந்து இன்னைக்கு எது எங்கும் நடந்திருக்காது என்றும் தெரிவித்தார். தெளிவாக முடிவு எடுத்த பின்பு தான் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்தார். அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கருத்தை தான் முன்வைத்திருந்ததாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: அதிமுக கொங்கு மண்டலமே காலியா?... செங்கோட்டையனை தொடர்ந்து தவெகவில் இணைந்த முக்கிய புள்ளிகள்... முழு லிஸ்ட்...!
திமுகவும் அதிமுகவும் வேறு வேறு அல்ல என்பதால் தான் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்தார். அதிமுகவிற்காக ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த தனக்கு கிடைத்த பரிசு தான் உறுப்பினர் பதவியை கூட பறித்தது என்று வேதனையை வெளிப்படுத்தினார். தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: தவெகவுடன் கைகோர்ப்பு..!! கட்சி மாறினாலும் பழச மறக்காத MGR விசுவாசி..!! இத கவனிச்சீங்களா??