×
 

“தயவு செய்து அப்படி பண்ணாதீங்க”... மனவேதனையைக் கொட்டித்தீர்த்த செங்கோட்டையன்... அதிமுகவில் பரபரப்பு...! 

இது எச்சரிக்கை இல்லை. வேண்டுகோளாக கேட்கிறேன். 45 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் தூய்மையாக பணியாற்றி இருக்கிறேன்.

அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியில் களமிறங்கிய செங்கோட்டையன் நேற்று முன் தினம் டிடிவி தினகரனையும், நேற்று ஓ.பன்னீர்செல்வத்தையும் ரகசியமாக சந்தித்ததாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி அரசியல் களமே பரபரப்பானது. இதனையடுத்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தான் டிடிவி தினகரனைச் சந்திக்கவில்லை என்றும், சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் தனது மனைவியைச் சந்திக்கவே சென்றதாகவும் தெரிவித்திருந்தார். 

இதனிடையே மீண்டும் நேற்று அவர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என செங்கோட்டையன் மறுத்துள்ளார். 

கோபிச்செட்டிப்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். நேற்று முன்தினம் பல்வேறு விளக்கங்களை சென்ன பிறகு வேண்டுமென்றே சில வதந்திகளை பரப்பி வருவது வேதனை அளிக்க கூடிய ஒன்று எனக்கூறினார். நேற்று முன்தினம் அரசியல் சந்திப்பு இல்லை என்றும், சிகிச்சை பெறும் மனைவியை சந்திக்க சென்றேன். கோபியில் உள்ள மக்களின் குடும்பத்தில் துக்க நிகழ்வுகளில் கலந்து உள்ளேன்.

ஆனால் என்னைப் பற்றி வதந்திகளை பரப்பி வருகின்றனர். என்னுடைய நோக்கம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கனவு நிறைவேற வேண்டும் என்று 5ம் தேதி கூறினேன். 

அதன் பிறகு எங்கும் அரசியல் ரீதியாக சந்திக்க வில்லை.  வதந்திகளை சிலபேர் வேண்டுமென்றே பரப்பி வருகின்றனர். சிலபேரை சந்தித்ததாக குறிப்பிட்டனர். இன்று வரை யாரையும் சந்திக்கவில்லை. அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இது போன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழக அரசியலில் தலைகீழ் திருப்பம்... ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ரகசிய சந்திப்பு? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...! 

என்னுடைய நோக்கத்தை சிதைக்க வதந்திகளை பரப்பி வருகின்றனர். நல்லசெயல்களுக்கு  உறுதுணையாக இருக்க வேண்டும்.  இது எச்சரிக்கை இல்லை. வேண்டுகோளாக கேட்கிறேன். 45 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் தூய்மையாக பணியாற்றி இருக்கிறேன்.

இதையும் படிங்க: ஒருங்கிணைப்பு குழு விவகாரம்... WAIT and SEE! தரமாக காய் நகர்த்தும் ஓபிஎஸ்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share