×
 

திமுகவை இரண்டாக உடைக்க பாஜக அடுத்த அஸ்திரம்!! சிவசேனாவுக்கு போட்ட அதே ஸ்கெட்ச்!

'சிவசேனாவை இரண்டாக உடைத்து பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த ஏக்நாத் ஷிண்டே போல், இவரும் அடுத்த ஏக்நாத் ஷிண்டேவாக மாற போகிறாரா' என, தி.மு.க., வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

பெங்களூரு தெற்கு நாடாளுமன்றத் தொகுதியின் பாஜக எம்.பி.யும், கட்சியின் இளைஞரணி தேசியத் தலைவருமான தேஜஸ்வி சூர்யா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தையொட்டி, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, திமுகவைச் சேர்ந்த ஒரு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் புதிய தம்பதிகளுக்கு சிறப்பு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து வழங்கினார்.

நாடாளுமன்றத்தில் திமுகவையும், தமிழ்நாடு அரசையும் கடுமையாக விமர்சிப்பதை வழக்கமாகக் கொண்டவர் தேஜஸ்வி சூர்யா. குறிப்பாக, இந்து விரோதக் கட்சி என்று திமுகவை அடிக்கடி சாடி வருபவர்.

இந்நிலையில், எதிர்க்கட்சியான திமுகவின் மூத்த எம்.பி.யால் விருந்து வழங்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விருந்து நிகழ்ச்சியில் பாஜக மற்றும் திமுக எம்.பி.க்கள் பலரும் கலந்து கொண்டு புது தம்பதிகளை வாழ்த்தினர்.

இதையும் படிங்க: என் தங்கச்சி..! கர்ஜனை மொழி... என் தங்கை கனிமொழி..! முதல்வர் ஸ்டாலின் புகழாரம்..!

விருந்துக்கு ஏற்பாடு செய்த அந்த திமுக மூத்த எம்.பி.யானவர், கட்சித் தலைமையிடம் எப்போதும் உயர்ந்த நம்பிக்கையும், மரியாதையும் பெற்றவர். அவரது அனுபவமும், செல்வாக்கும் கருதி, வர இருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கிட்டத்தட்ட 60 தொகுதிகளைக் கண்காணிப்பதற்கான முக்கியப் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது அவரது கட்சிக்குள் உள்ள செல்வாக்கை காட்டுகிறது.

மேலும், இந்த எம்.பி.க்கும் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத்துக்கும் மிக நெருக்கமான தொடர்பு உள்ளது. இருவரும் அடிக்கடி தொலைபேசியில் உரையாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுடனும் இவருக்கு நல்ல நட்பு உள்ளது. 

சபாநாயகர் இல்லாத நேரங்களில் அவை நடவடிக்கைகளைக் கவனிக்கும் சிறப்புக் குழுவிலும் (Panel of Chairpersons) இந்த திமுக எம்.பி. உறுப்பினராக உள்ளார். இது அவரது அனைத்துக் கட்சி உறவுகளையும், நாடாளுமன்றத்தில் உள்ள மரியாதையையும் வெளிப்படுத்துகிறது.

இந்த விருந்து விவகாரம் திமுக உறுப்பினர்கள் மத்தியில் பெரும் சலசலப்பையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பாஜக இந்த மூத்த தலைவரை தன்பக்கம் இழுக்க முயற்சி செய்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

குறிப்பாக, மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து, ஏக்நாத் ஷிண்டேயை பாஜகவுடன் கூட்டணி அமைக்க வைத்தது போல, இவரும் அடுத்த 'ஏக்நாத் ஷிண்டே'யாக மாறிவிடுவாரா என்ற கிசுகிசுப்புகள் திமுக வட்டாரங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இது கட்சிக்குள் உள்ள உள்மனச் சங்கடத்தையும், எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த அச்சத்தையும் காட்டுகிறது.

இதையும் படிங்க: ADMK கோட்டையிலேயே ஓட்டை.. இந்த அவமானம் உனக்கு தேவையா? EPS- ஐ பந்தாடிய அமைச்சர் சிவசங்கர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share