×
 

"பீகாரில் பாஜக அரியணை ஏறாது "... கருத்துக் கணிப்பை தவிடு பொடியாக்கி மூத்த பத்திரிகையாளர்... அடுக்கடுக்காய் சொன்ன காரணங்கள்..!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இவ்வாறு இருக்க, பீகாரில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்காது என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அடித்துக் கூறியுள்ளார். 

பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. 

243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன. குறிப்பாக மேட்ரிஸ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 147 முதல் 167 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 70 முதல் 90 இடங்களையும் ஜன்சுராஜ் கட்சி ஐந்து இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

பீப்பிள்ஸ் பல்ஸ்.கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 133 முதல் 159 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 75 முதல் 101 தொகுதிகளிலும் ஜன்சுராஜ் கட்சி ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீப்புள்ஸ் இன்சைட் விடுத்துள்ள கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 133 முதல் 148 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 87 முதல் 102 இடங்களையும், ஜன்சுராஜ் கட்சி இரண்டு இடங்களையும் கைப்பற்றக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: குற்றவாளிகள் வேட்டையாடப்படுவார்கள்... உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்ஜனை...!

ஜேவிசியின் கருத்து கணிப்பு முடிவுகளின் படி, பாஜக கூட்டணி 135 முதல் 150 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 88 முதல் 103 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

இதேபோல் பாஜக கூட்டணி 142 முதல் 162 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 80 முதல் 98 இடங்களிலும் கைப்பற்றும் என பீமார்க் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

தைனிக் பாஸ்கர் நாளிதள் பாஜக கூட்டணி 145 முதல் 160 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 73 முதல் 91 இடங்களையும், கைப்பற்றும் என சுட்டிக்காட்டியுள்ளது. 

இதேபோல் சாணக்கியா ஸ்ட்ராடஜிஸ் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 138 இடங்கள் வரையும், காங்கிரஸ் கூட்டணி 108 இடங்கள் வரையும் வெற்றி பெறக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இவ்வாறு இருக்க, பீகாரில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்காது என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அடித்துக் கூறியுள்ளார். 

பீகாரில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்காது என்று மூத்த பத்திரிகையாளர் சந்திரசேகர் கூறியுள்ளார். 

இதுகுறித்து பிரபல சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "என்னுடைய பார்வையில் இந்த முறையும் இந்த தேர்தல் மிகவும் கடினமாக போட்டியாக தான் பார்க்கிறேன். அதனால் இப்படி ஒரு ஸ்வீப்பிங் விக்டரி என்று இறுதி முடிவுகள் இருக்காது.என நம்புகிறேன். 

 வேலையின்மை, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலமாக இருக்கும் பீகார் மற்றும் அதன் பொருளாதார பிரச்சனைகள், வாழ்வாதார பிரச்சினைகள் என நிறைய இருக்கும் இந்த தருணத்தில், நிச்சயமாக ஒரு 20 வருடம் ஆட்சி செய்கின்ற ஒரு முதலமைச்சருக்கு இவ்வளவு பெரிய வெற்றி வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகம் தான் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: உண்டியலுக்கும் பாதுகாப்பு இல்ல... உயிருக்கும் பாதுகாப்பு இல்ல... முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த நயினார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share