தூசு தட்டி எடுக்கப்பட்ட செந்தில் பாலாஜி சகோதரர் வழக்கு... காவல்துறையிடம் நீதிமன்றம் கேட்ட சுளீர் கேள்வி...!
3 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் இந்த வழக்கில், தற்போது காவல்துறை நடவடிக்கை எடுப்பது ஏன்? - நீதபதி கேள்வி.
வருமானவரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் முன் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் தொடர்ந்த வழக்கு.
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வின்போது மனுதாரர் சம்பந்தப்பட்ட இடத்தில் இல்லை. பிரச்சனை செய்ய தூண்டியதாகவே இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு கொலை வழக்குகளிலேயே மறுநாளே பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றனவே இதில் ஏன் கால தாமதம் என கேள்வி எழுப்பிய நீதிபதி, அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதால் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து மதுரை கிளை உத்தரவு.
கரூர் மண்மங்கலத்தை சேர்ந்த அசோக்குமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முன் ஜாமின் கோரி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " கடந்த 2023 மே 26 ஆம் தேதி கரூர் மாரப்ப கவுண்டர் குணசேகரன் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தவறான வார்த்தைகளால் திட்டியதாகவும், அவர்களது லேப்டாப் மற்றும் 5-பென் டிரைவ்களை பறித்துச் சென்றதாகவும் கூறி, வருமான வரித்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணகாந்த் அளித்த புகாரின் அடிப்படையில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசு - திமுக இடையே உள்குத்து... செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் என்ன நடந்துச்சி தெரியுமா? - குட்டை உடைத்த நிர்மல் குமார்...!
நான் கரூர் MLA-வின் சகோதரர். தற்போது ஆட்சி மாறி இருப்பதால் அரசியல் உள்நோக்கத்திற்காக என்னை சிக்க வைக்கும் நோக்கில், வழக்கில் சிக்க வைத்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பையும் வழங்குகிறேன். எனவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், " 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வின்போது மனுதாரர் சம்பந்தப்பட்ட இடத்தில் இல்லை. பிரச்சனை செய்ய தூண்டியதாகவே இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டது.
அரசுத்தரப்பில் கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு கோரப்பட்டது. அதற்கு நீதிபதிகள், "3 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் இந்த வழக்கில், தற்போது காவல்துறை நடவடிக்கை எடுப்பது ஏன்? கொலை வழக்குகளிலேயே மறுநாளே பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றனவே என குறிப்பிட்டு வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ரீலிஸ் உலகத்தைவிட்டு கொஞ்சம் ரியாலிட்டிக்கு வாங்க..!! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜி கண்டனம்..!!