ஒரு முஸ்லிம் ஓட்டு கூட விழாது!! திமுகவுக்கு ஷாக் கொடுத்த சன்னி பிரிவு!! முஸ்லிம் அமைப்புகள் திடீர் போர்க்கொடி!
முஸ்லிம் மக்களில், பெருவாரியாக உள்ள சன்னி பிரிவினர், தி.மு.க., அரசு தங்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டி உள்ளனர். இது தி.மு.க., தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள சன்னி பிரிவினர் தி.மு.க. அரசு தங்களுக்கு எதிராக செயல்படுவதாக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர். இது தி.மு.க. தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் சன்னி முஸ்லிம் அமைப்புகள் கண்டன கூட்டம் நடத்தி, அரசின் நடவடிக்கைகளை கண்டித்தன.
தென்னிந்திய தர்கா, பள்ளிவாசல் சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: "சன்னி முஸ்லிம்கள் அமைதியை விரும்புபவர்கள். தர்கா, மசூதி வழிபாட்டை பின்பற்றுபவர்கள். பிரதமர் மோடி கூட அஜ்மீர் ஷெரீப் தர்காவுக்கு ஆண்டுதோறும் புனித போர்வை அளிக்கிறார். ஆனால் சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்று சொல்லும் தி.மு.க. அரசு எங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்கிறது."
வக்ப் வாரியத்தில் உண்டியல் வருமானத்தில் 7% வாரியத்துக்கு செல்கிறது. ஆனால் வாரியம் அரசியல் சண்டைக்கு இடமாகிவிட்டது. நிரந்தர முதன்மை செயல் அலுவலர் இல்லாததால் கோப்புகள் தேங்கி, வெள்ளிக்கிழமை கூட்டங்கள் நடக்கவில்லை. தற்போதைய அதிகாரிக்கு தர்கா-மசூதி கலாசாரம் தெரியவில்லை. பல பிரச்னைகள் நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்படுகின்றன. அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லை.
இதையும் படிங்க: செய்தியாளரை தாக்கிய வழக்கு!! திமுக எம்.எல்.ஏ-வுக்கு ஜாமின்! கல்குவாரியை படம் எடுத்த விவகாரம்?!
மிக முக்கியமாக, தலைமை ஹாஜி நியமனத்தில் 'பெரும் துரோகம்' செய்துள்ளதாக குற்றச்சாட்டு. கடந்த ஆண்டு மறைந்த சலாஹுத்தீன் அய்யூப் பதவிக்கு பதிலாக வேலூர் உஸ்மான் முஹயித்தீனை நியமித்தது அரசு. அவர் தாருல் உலூம் தியோபந்த் பட்டதாரி. சன்னி வழிபாட்டுக்கு எதிரான மனநிலை கொண்டவர் என்று கூறப்படுகிறது.
இதற்கு பின்னணியில் தி.மு.க. கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. நவாஸ் கனி ஆகியோர் தலைமைச் செயலரை சந்தித்து அழுத்தம் கொடுத்ததாகவும், ஜவாஹிருல்லா தனது வாட்ஸாப் குழுவில் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சன்னி முஸ்லிம்கள் நோன்பு, பெருநாள் பிறை, மாத பிறை விஷயங்களை தலைமை ஹாஜி சொல்வதை பின்பற்ற வேண்டாம் என முடிவு செய்தனர். சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 'தி.மு.க. மாறாவிட்டால் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த உத்தரவு அனைத்து தர்கா, மசூதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
உளவுத்துறை மூலம் இந்த தகவலை அறிந்த தி.மு.க. தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. சிறுபான்மை சமூக ஆதரவு இழக்கும் அபாயம் எழுந்துள்ளது. வரும் தேர்தலில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: பிப்., 22 என்ன நடக்கும்?! திமுக அட்ராசிட்டியால் காங்., அப்செட்?! விஜய் உடன் பேச்சு நடத்த ராகுல்காந்தி ப்ளான்?!