×
 

10 சீட் வேணும்!! விஜயுடன் பேரத்தை துவங்கிய ஓபிஎஸ்! அதிமுக - பாஜக கூட்டணிக்கு கல்தா!

த.வெ.க., கூட்டணியில் இணைய, 10 'சீட்' கேட்டு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ரகசிய பேச்சை துவக்கி உள்ளார்.

சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியில் மீண்டும் இணைய தீவிர முயற்சிகள் மேற்கொண்டார். நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை உருவாக்கி, மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமித்தார். அவரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க பாஜகவும் முயற்சித்தது.

ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வமையும் அவரது ஆதரவாளர்களையும் சேர்க்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் தரப்பு, பழனிசாமியை தோற்கடிக்க முடிவு செய்துள்ளது. நேற்றுமுன்தினம் பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உடன் கூட்டணி அமைக்கலாமா அல்லது திமுக உடன் கூட்டணி அமைக்கலாமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பெரும்பாலான நிர்வாகிகள் தவெக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: காத்திருக்கும் அரசியல் சதுரங்கம்!! கச்சிதமாய் காய் நகர்த்தும் விஜய்! தவெகவின் கூட்டணி கணக்கு!

பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறியதாவது: அதிமுகவில் இணைய பன்னீர்செல்வம் கடைசிவரை முயற்சித்தார். ஆனால் அனைத்து வாய்ப்புகளும் மூடப்பட்டதால், நடிகர் விஜயின் தவெக உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளார். 

கூட்டணியில் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று விஜய் தரப்பிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஆனந்த் ஆகியோர் மூலம் ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மேலும், ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் பன்னீர்செல்வம் தரப்பு செய்த முதலீட்டை திரும்பப் பெறுவதில் சிக்கல் உள்ளது. ஆளும் தரப்பில் இருந்து அதைப் பெற்றுத்தர உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு கூட்டணி உறுதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கட்சி நிர்வாகிகள் தவெக கூட்டணியை வலியுறுத்தியதால், அந்த வாய்ப்பே அதிகம் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், பன்னீர்செல்வம் இறுதி முடிவை பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: ஓபிஎஸ்., டிடிவி., அன்புமணி!! விஜய் தலைமையில் உருவாகும் பிரமாண்ட கூட்டணி! சூடுபிடிக்கும் களம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share