#BREAKING: பாடகர் அறிவு அதிரடி ARREST..! நீட் எதிர்ப்பு போராட்டம்... வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்..!!
நீட் தேர்வு விவகாரம் குறித்து தலைமைச் செயலகம் முன்பாக முழக்கம் எழுப்பிய பாடகர் அறிவு கைது செய்யப்பட்டார்.
நீட் தேர்வு விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் நீட் தேர்வு விவகாரத்தை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் கடும் போராட்டம் நடைபெற்ற வருகிறது. இளையோர் படையின் போராட்டத்தால் டெல்லி ஸ்தம்பித்துள்ளது.
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையிலும் நீட் தேர்வு விவகாரத்தை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் புகுந்து பாடகர் அறிவு நீட் தேர்வு விவகாரம் குறித்து முழக்கம் எழுப்பியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
பாடகர் அறிவு தமிழக வெற்றி கழகத்தின் கொடி பாடலை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீட் தேர்விற்கு எதிராக தலைமைச் செயலகத்திற்குள் புகுந்து கோஷம் எழுப்பிய பாடகர் அறிவு கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்திற்குள் புகுந்த பாடகர் அறிவு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்.
இதையும் படிங்க: ரொம்ப ஸ்ட்ரிக்ட்..! போலீஸ் நடவடிக்கை... கொந்தளிக்கும் மார்க்கண்டேயன் ஆதரவாளர்கள்..!
இது தொடர்பாக முதலமைச்சர். விஜய் பேச வேண்டும் என்றும் முழக்கமிட்டார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். காவல்துறை வாகனத்தில் ஏற மறுத்த பாடகர் அறிவு-வை வலுக்கட்டாயமாக போலீசார் அழைத்துச் சென்றனர். இதனால் தலைமைச் செயலக வளாகத்திற்குள் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை 822 பேர் கைது: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அதிரடி உத்தரவு!