×
 

கரூர் SIT அலுவலகம் அருகே எரிந்த நிலையில் காகிதங்கள், பென்ட்ரைவ்! சந்தேகம்… பரபரப்பு…!

கரூர் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகம் அருகே எழுந்து நிலையில் காகிதங்கள் மற்றும் பென்டிரைவ் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

2026 ஆம் நடக்கும் சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை உற்சாகத்துடன் தொடங்கி நடத்தி வந்தார். அலைக்கடலென மக்கள் கூட்டம் திரண்டு விஜய்க்கு பேராதரவு கொடுத்தனர். இந்த உற்சாகம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம் கரூர் மாவட்டத்தின் நிகழ்ந்த ஒரு துயர சம்பவம். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணத்தை நடத்தினார்.

விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 உயிர்கள் அனாமத்தாக பறிபோனது. மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டை உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு உடனடியாக அறிவித்தது.

இந்த சம்பவம் தொடர்பான வடக்கை விசாரித்த நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றையும் அமைத்தது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நேர்மையாக நடைபெறாது என்று நினைத்த தமிழக வெற்றி கழகம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகமும் கரூர் சம்பவத்தை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை சிபிஐக்கு மாற்றியது. 

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் கரூர் சம்பவம்... சிபிஐ அதிகாரிகளுடன் SIT அதிகாரி திடீர் சந்திப்பு... என்னவா இருக்கும்?

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு அலுவலகம் அருகே எரிந்த நிலையில் காகிதங்கள் மற்றும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துண்டு துண்டாக்கப்பட்ட நிலையில் காகிதங்கள் எரிக்கப்பட்டுள்ளதால் சந்தேகத்தைக் கிளப்பி உள்ளன. வழக்கு சிபிஐக்கு மாறி உள்ள நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று அலுவலகத்தை காலி செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றுடன் அலுவலகத்தை காலி செய்வதால் தேவையற்ற காகிதங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எரிக்கப்பட்ட காகிதங்களுக்கு அருகில் பென்டிரைவ் ஒன்றும் கிடைக்கப்பெற்று இருக்கிறது. இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கூட்டணிக்கு தவம் இருக்கோமா? அந்த அவசியம் அதிமுகவுக்கு இல்ல... ராஜேந்திர பாலாஜி காட்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share