தமிழுக்கு பேரிழப்பு..! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்.!
சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த இவர், வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 90.
சாலமன் பாப்பையா அவர்கள் தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்தவர். அவரது நகைச்சுவை கலந்த பேச்சும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் மக்களை ஈர்த்தன. சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் அவரது பங்கு மகத்தானது. ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களை நடத்திய அவர், தமிழ் இலக்கியத்தை சாமானிய மக்களோடு இணைத்த பாலம் போன்றவர்.
இந்த மறைவுச் செய்தியறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும் வேதனையும் அடைந்தேன் என கூறினார். தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும் சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மகத்தானது என்றார்.
இதையும் படிங்க: உட்காரும் இடத்தில் உறுத்துதா? இவங்களுக்கு எதுக்கு சுதந்திரம்.? முதல்வருக்கு சீமான் காட்டமான கேள்வி..!
அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும் எனவும் வேதனை தெரிவித்து உள்ளார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: சொன்னா கேளுங்க..! பட்டினப்பாக்கத்தில் வேண்டாம்... புதிய தலைமைச் செயலக விவகாரத்தில் EPS எச்சரிக்கை..!!