×
 

தீவிரவாதிகளின் புகலிடமா தமிழகம்? பயமா இருக்கு..!! எஸ். பி. வேலுமணி ஆதங்கம்..!!

தீவிரவாதிகளின் புகலிடமா தமிழ்நாடு என்ற அச்சத்தை ஏற்படுத்திருப்பதாக S.P. வேலுமணி தெரிவித்தார்.

திருப்பூரில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. பாதுகாப்பு குறைப்பாட்டை வெளிச்சம் போட்டு காட்டுவதாக எதிர் கட்சியினர் குற்றம் சாட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருப்பூரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளின் புகலிடமாகத் தமிழகம் மாறி வருகிறதோ என்ற அச்சத்தையும் இது, பொதுமக்களிடையே ஏற்படுத்தி உள்ளது என்றும் கூறினார். ஏற்கனவே சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் முற்றிலும் தோல்வியடைந்த திமுக ஆட்சியில், தற்போது பயங்கரவாதிகளின் ஊடுறுவலும் அதிகரித்துள்ளது என்றும் இது, இந்த அரசுக்கு மக்கள் பாதுகாப்பில் கொஞ்சமும் அக்கறை இல்லை என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ல் கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை "சிலிண்டர் விபத்து" என மழுப்பி மக்களை ஏமாற்ற முயன்ற திமுக அரசு, இப்போது இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்ற கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: TWIST மேல TWIST..!! அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் தவெகவில் ஐக்கியம்..!!

நிர்வாகத்திலும், பாதுகாப்பிலும் முற்றிலும் தோல்வியடைந்த திமுக அரசிற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு, தமிழக மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்றும் கூறினார். 

இதையும் படிங்க: விடியா ஆட்சிக்கு வீட்டு BILL- லே சாட்சி..!! இனியும் தொடரக்கூடாது...!! அதிமுக கண்டனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share