×
 

“பிரேமலதாவை ஃபினிஷ் பண்ணிடுவோம்”... வாக்காளர்கள் மத்தியில் ஸ்ரீதர் வாண்டையார் சர்ச்சை பேச்சு...!

எங்களை புறக்கணித்தவர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் கூட்டணி வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

சீட்டு தருவதாக கூறி திமுக ஏமாற்றி விட்டது என மயிலாடுதுறையில் பாமக வேட்பாளரை ஆதரித்து பேசிய மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் ஆதங்கம். மயிலாடுதுறை திமுக வேட்பாளர் ஓட்டு கேட்க சென்றால் விரட்டியடிக்கப்படுகிறார் திமுகவிற்கு பொதுமக்களிடம் எதிர்ப்பு உள்ளது என்றும் விமர்சனம் 

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமி ஆதரித்து மூவேந்தர் முன்னேற்ற கழகம் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் பிரச்சாரம் செய்தார். மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு அவர் பேசுகையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நானும் அன்புமணியும் சிதம்பரத்தில் மிகப்பெரிய கூட்டத்தை நடத்தினோம். மூவேந்தர் முன்னேற்ற கழகம் செல்வாக்காக இருக்கக்கூடிய மயிலாடுதுறை காட்டுமன்னார்குடி, ஜெயங்கொண்டம், விருத்தாச்சலம் உள்ளிட்ட நான்கு இடங்களில் பாமகவினர் போட்டியிடுகின்றனர்.

விருத்தாச்சலத்தில் போட்டியிடும் பிரேமலதாவை ஃபினிஷ் பண்ணிடுவோம். கரவை மாடு வாங்கிட்டு வாரேன் என்று சொல்லிவிட்டு ஏமாத்திட்டு போனவங்க திரும்பி அந்த பக்கமே வரல. இப்ப 250 கோடி 10 சீட்டு வாங்கி இருக்காங்க. நான் சீட்டு கேட்டேன் முன்னாடியே தரேன்னு சொல்லி திமுக ஏமாற்றிவிட்டது.  ஓபிஎஸ், பிரேமலதா போன்றவர்கள் திமுகவை கரையேர்த்துவாங்கன்னு  நம்புகிறார்கள், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தை நம்பாமல் கண்டவர்களை நம்பி வீணா போய் தோத்துப் போகப் போறாங்க.

இதையும் படிங்க: மோடி - பழனிசாமிக்கும்!! ஸ்டாலின் - ராகுலுக்கும் இதான் வித்தியாசம்! வெளுத்து வாங்கும் அண்ணாமலை!

பாஜக அருமையான கூட்டணி அமைத்துள்ளது. கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை போன்ற மாவட்டங்களில் முக்குலத்தோறும் வன்னியர்களும் சேர்ந்து வாழ்கிறார்கள். இந்தப் பக்கம் எல்லாம் நாம் வெற்றி பெறுவோம். எங்களை புறக்கணித்தவர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் கூட்டணி வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வெளியூரிலிருந்து வேட்பாளர்களை நிறுத்துகிறது. நாம் எங்கே போய் அவரை தேடுவது ஆனால் பாமக வேட்பாளர் மண்ணின் மைந்தர் நமக்காக என்ன உதவி வேண்டுமானாலும் செய்வார். மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் சாலை வசதி செய்து தரப்படவில்லை. தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மயிலாடுதுறை மாவட்டத்தை தந்து ஆட்சியர் அலுவலகம் எஸ் பி அலுவலகம் எடப்பாடி கொண்டு வந்தார். எடப்பாடி ஆட்சி நீடித்திருந்தால் மயிலாடுதுறை நவீன மருத்துவமனை கட்டிக் கொடுத்திருப்பார்.

அனைத்து திட்டங்களும் நிறைவேற்ற வேண்டுமென்றால் மயிலாடுதுறையில் மாம்பழம் சின்னத்திற்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். திமுக வேட்பாளர்களை ஊருக்குள்ளே விடாமல் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளர்  வாக்கு கேட்டு போக முடியவில்லை எதிர்ப்பாக உள்ளது. அதிமுக கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.

இதையும் படிங்க:  விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share