×
 

தவெகவுக்கு போகாதீங்க! திமுகவுக்கு வாங்க! அதிருப்தி அதிமுக நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்து, முதல் வர் விஜயின் த.வெ.க.,வில் இணைந்தனர்.

சட்டசபை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த பின்னர் அதிமுகவில் அதிருப்தி எகிறி வரும் நிலையில், கட்சி பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி நிர்வாகிகளுடன் எந்த சமரசமும் பேசாதது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக அதிருப்தி அதிமுகவினரை தொடர்பு கொண்டு பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

“அதிமுகவில் நீடிக்க வேண்டும். உட்கட்சி பிரச்னைகள் வரத்தான் செய்யும், அது தீர்ந்துவிடும். அதற்காக திராவிட பாரம்பரியத்தை விட்டுக்கொடுத்து புதிய கட்சிக்கு செல்ல வேண்டாம்” என ஸ்டாலின் ஆறுதல் கூறுவதாகவும், “கட்சி மாறும் எண்ணம் உறுதியாக இருந்தால் திமுகவுக்கு வரலாம். உரிய மரியாதையுடன் அரவணைக்கப்படுவீர்கள்” என உறுதியளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் பழனிசாமியுடன் மீண்டும் இணைந்தாலும், கட்சிக்குள் அதிருப்தி தொடர்கிறது. முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட-ஒன்றிய செயலர்கள் உள்ளிட்டோர் தவெக பக்கம் நகர்வது திமுக தலைமைக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஸ்டாலின் தானே முனைந்து அதிருப்தியாளர்களை அணுகுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் பாணியில் அரசியல்! ரூட்டை மாற்றிய உதயநிதி!! இனி வாரம் ஒருநாள் மீட்டிங்! இரண்டு அறிக்கை மட்டுமே!

சென்னையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரை ஸ்டாலின் நேரடியாக பேசி திமுகவில் இணைத்துக்கொண்டதும் இந்த தகவலுக்கு வலு சேர்க்கிறது. அதிருப்தி அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: “பழனிசாமியை சுற்றியுள்ள ஜால்ராக்கள் கொடுக்கும் பட்டியலை வைத்து நீக்கம், நியமனம் என தவறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளோரின் பட்டியலை திமுக முக்கிய நிர்வாகிகள் ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளனர். அதன் அடிப்படையில் மாவட்ட செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள் வாயிலாக ஸ்டாலின் நேரடியாக பேசுகிறார்” என்றார்.

ஸ்டாலின் பேச்சில், அதிமுக அழியாமல் இருக்க வேண்டும் அல்லது அதன் நிர்வாகிகள் தாய்க் கழகமான திமுகவுக்கு வர வேண்டும் என்ற இரட்டை நோக்கம் தெரிவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. “எதிர்க்கட்சியான திமுகவுக்கு கூட அதிமுக மீது இருக்கும் அக்கறை பழனிசாமிக்கு இல்லாதது வருத்தமளிக்கிறது” என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

இந்த நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் உள் பிரச்னைகளை திமுக தலைமை எப்படி பயன்படுத்துகிறது என்பதை அடுத்த சில வாரங்கள் தீர்மானிக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து நடிகை கௌதமி விலகல்! அரசியல் சூழலால் கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share