டெல்லி ஓனர்கிட்ட பதில் வாங்கித்தர முடியுமா? இபிஎஸ், பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நறுக் கேள்வி!
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழகத்திற்கு வரும் பாஜ ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பிரசாரம் செய்ய வரும் பாஜக முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஸ்டாலின், “தமிழ்நாட்டுக்கு வரும் பாஜக அமைச்சர்களும், பாஜக முதல்வர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?” என்று தொடங்கி பின்வரும் கேள்விகளை எழுப்பினார்:
-
தமிழ்மண்ணில் நின்று ‘மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்’ என்று சொல்லி பிரசாரம் செய்யத் தயாரா?
-
நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்கு தருவது எவ்வளவு? பாஜகவால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்கு தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?
-
கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் FCRA சட்டத் திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா?
-
இவற்றுக்கெல்லாம், எடப்பாடி பழனிசாமியால் தனது டெல்லி ஓனர்களிடம் பதில்பெற்றுத் தர முடியுமா?
-
கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்?
மேலும், “தமிழகத்தை துண்டாட எத்தனை பேர் டெல்லியிலிருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” என்று உறுதியுடன் கூறினார்.
இதையும் படிங்க: திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!
தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்களும் & பா.ஜ.க. முதலமைச்சர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 6, 2026
❓ தமிழ்மண்ணில் நின்று, "மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்" என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா?
❓ நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு?… pic.twitter.com/XIURF26yD4
தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகத்துக்கு வரும் பாஜக தலைவர்களுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் இந்தக் கேள்விகளை எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை, நிதி ஒதுக்கீடு, FCRA சட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை மையப்படுத்தி அவர் எழுப்பியுள்ள இந்தக் கேள்விகள், பாஜகவுக்கு சவாலாக அமைந்துள்ளன.
தி.மு.க. தரப்பில் இந்தப் பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு, தி.மு.க. தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரும் சட்டசபைத் தேர்தலில் இந்தப் பிரச்சினைகள் முக்கியமான விவாதப் பொருளாக மாறும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!