×
 

டீக்கடையில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு!! அதிமுக கூட்டணி கட்சிகள் இரட்டை இலையில் ஏன் போட்டியிடவில்லை?

கூட்டணி கட்சிகள் ஏன் அதிமுக சின்னத்தில் போட்டியிடவில்லை? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருச்சி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி கிழக்கு தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். காந்தி மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரிப்புக்காக வாக்கிங் சென்ற அவர், பொதுமக்களுடன் நெருங்கிப் பழகினார். பின்னர் சாலையோர டீக்கடையில் அமர்ந்து தேநீர் அருந்தியபடி, அமைச்சர்களுடன் உரையாடினார். இந்த காட்சி பலரது கவனத்தை ஈர்த்தது.

திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சிகளின் 9 வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சிகரமாக பேசினார். அப்போது அவர், “எடப்பாடி பழனிசாமி முழு சந்திரமுகியாக மாறிவிட்டார். அவர் ஆட்சிக்கு வந்தால் எல்லோரையும் அடகு வைத்துவிடுவார். தமிழகத்தையே விற்றுவிடுவார்” என்று கடுமையாக விமர்சித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், “டூர் மோடில் இருக்கும் அவர், பொத்தாம் பொதுவாக திமுக மீது குற்றம் சாட்டுகிறார். ஒரு வாரம் தமிழகத்தில் தங்கி இருந்து பார்த்தால், இங்கு நாங்கள் கொண்டுவந்துள்ள திட்டங்கள் அவருக்கு தெரியும். தமிழகம் எப்படி தலைநிமிர்ந்து நிற்கிறது என்பது புரியும்” என்றார்.

இதையும் படிங்க: மோடியும், நானும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பவர்கள்!! பலருக்கு இந்த தகுதி இல்லை!! ட்ரம்ப் சூசகம்!

மேலும், “நாம் போராடுவது திமுக வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழகத்தின் வெற்றிக்காக. பாஜக டப்பா இன்ஜின் முன்னால் திமுக சூப்பர் ஃபாஸ்ட் இன்ஜின் தலை குனியாது” என்று உறுதியாகக் கூறினார்.

கூட்டணி கட்சிகள் குறித்து பேசிய முதல்வர், “எல்லா இடங்களிலும் கூட்டணியில் பிரச்னை இல்லை என்று சொல்கிறீர்களே? பிறகு ஏன் டெல்லிக்கு சென்றீர்கள்? கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்றால், கூட்டணி கட்சிகள் ஏன் அதிமுக சின்னத்தில் போட்டியிடவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். இது அதிமுக கூட்டணியினருக்கு நேரடி சவாலாக அமைந்தது.

கடந்த தேர்தலில் திருச்சியில் உள்ள 9 தொகுதிகளிலும் மக்கள் திமுகவுக்கு வெற்றி தந்ததை நினைவுகூர்ந்த ஸ்டாலின், “இந்த முறையும் 100 சதவீத வெற்றி கிடைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் கொண்டுவந்த முத்திரை திட்டங்கள், கொடுத்த வாக்குறுதிகளை மறக்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன் என்று உறுதியளித்தார்.

திருச்சி மக்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்திய இந்த பிரசாரம், தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தை இன்னும் சூடுபிடிக்கச் செய்துள்ளது. முதல்வரின் பேச்சு, எதிர்க்கட்சிகளுக்கு பதிலடியாகவும், திமுக கூட்டணியினருக்கு ஊக்கமாகவும் அமைந்தது.
 

இதையும் படிங்க: லேட் பண்ணாதீங்க! சொன்ன டைமுக்கு வாங்க!! தவெக தலைவர் விஜய்க்கு தேர்தல் அதிகாரிகள் அட்வைஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share