என் புருசன் ஏன் தோத்தாரு? துர்கா ஸ்டாலின் புலன் விசாரணை?! கொளத்தூரில் நடந்தது என்ன! பகீர் தகவல்!
யாரும் எதிர்பாராத வகையில் 4வது முறை கொளத்துாரில் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வி அடைந்தார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த முறை எதிர்பாராத தோல்வியை சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முதல்வர் வேட்பாளராக களமிறங்கி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திய தொகுதியிலேயே தோல்வி அடைந்திருப்பது திமுகவினரையும் கூட்டணி கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் பள்ளிகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், நூலகங்கள், பூங்காக்கள், ஏரிகள் சீரமைப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டன. மேலும், மாதத்திற்கு இரு முறை தொகுதிக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறியும் பணியிலும் ஸ்டாலின் ஈடுபட்டிருந்தார். இதனால் இந்த முறைவும் எளிதாக வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை திமுகவினரிடம் இருந்தது.
ஆனால் தேர்தல் முடிவில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த தோல்வி ஸ்டாலின் குடும்பத்தினரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “தவெக ஆட்சி அமைக்க இடையூறு செய்ய மாட்டோம்... ஆனா...” - விஜய்க்கு ஸ்டாலின் போட்ட 2 கன்டிஷன்கள்...!
தோல்விக்கான காரணங்களை ஆராயும் பணியை ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நேரடியாக மேற்கொண்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொளத்தூரில் நடந்த பல்வேறு சமூக மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த துர்கா, அங்கு அறிமுகமான பெண்களிடம் தற்போது தொலைபேசியில் தொடர்புகொண்டு தொகுதி நிலவரம் குறித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
தொகுதியில் நடந்த பிரச்சினைகள் குறித்து பலமுறை மனுக்கள் அனுப்பப்பட்டும் அவை சரியாக கவனிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலர், “கட்சிக்காக உண்மையாக உழைத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டனர். வெளியில் இருந்து ஆட்களை கூட்டி வந்து கூட்டம் காட்டியதால் உண்மையான தரை மட்ட நிலை தெரியாமல் போனது” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் நடந்தது போல வீடு வீடாக சென்று தேர்தல் பணியாற்றும் அமைப்பு கொளத்தூரில் சரியாக இயங்கவில்லை என்பதும் தோல்விக்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த விசாரணைக்குப் பிறகு தொகுதி நிர்வாகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இக்கட்டான சூழலிலும் உங்களுடன் நான் இருப்பேன்!! மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார் ரஜினிகாந்த்!