×
 

5 தொகுதி பைனல் பண்ணிக்கலாம்!! மு.க.ஸ்டாலின் டீல்! திமுக - மார்க். கம்யூ., தொகுதி பங்கீடு! சண்முகம் பரிசீலனை!

5 தொகுதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். முதல்வர் கூறி இருப்பதால், அதனை பரிசீலிக்க வேண்டியது எங்கள் கடமை என சண்முகம் தெரிவித்தார்.

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். 

மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது, “நாங்கள் 6 தொகுதிகள் கேட்டோம். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின், புதிய கட்சிகள் வந்துள்ளதால் மற்ற கட்சிகளைப் போல மார்க்சிஸ்டும் தொகுதிகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். 5 தொகுதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என அவர் கேட்டுக்கொண்டார். தொகுதி ஒதுக்கீட்டில் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்தார்” என்றார்.

மேலும், “முதலமைச்சர் கூறியிருப்பதால், அதை பரிசீலிக்க வேண்டியது எங்கள் கடமை. இது குறித்து எங்கள் நிர்வாகக் குழு கூடி முடிவு எடுக்கும்” என்றும் சண்முகம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Breaking! திமுக கூட்டணியில் இருந்து விலகியது தவாக!! 10 கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி! வேல்முருகன் அறிவிப்பு!

சென்னையிலும் ஒரு தொகுதியை கேட்டுள்ளதாகவும், முதலில் எத்தனை தொகுதிகள் கிடைக்கிறது என்பது முடிவான பிறகே எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

“கொள்கைப் பூர்வமாக தீர்மானத்தின் அடிப்படையில் தான் தி.மு.க. அணியில் நாங்கள் இருக்கிறோம். எத்தனை தொகுதிகள் கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அணியில் நீடிப்பதா வேண்டாமா என முடிவு செய்யும் கட்சி மார்க்சிஸ்ட் அல்ல” என்றும் சண்முகம் வலியுறுத்தினார்.

மார்க்சிஸ்ட் கட்சி முதலில் 7 தொகுதிகள் கேட்டு, பின்னர் 6 தொகுதிகளுக்கு இறங்கியிருந்தது. ஆனால் தி.மு.க. தரப்பு 5 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தி.மு.க. கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த இழுபறி அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: சட்டசபை தேர்தலில் போட்டியா? பிரசாரம் மட்டுமா? பிரேமலதா விஜயகாந்த் தீவிர ஆலோசனை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share