AIIMS வராது; MetroRail தராது!! கீழடியை மறைக்கும் பாஜக அரசின் ------- அரசியல்!! ஸ்டாலின் தெறி!!
எய்ம்ஸ் வராது, மெட்ரோ ரெயில் தராது, கீழடி ஆய்வறிக்கையை மறைக்கும் பாஜக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரை: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். இன்று காலை முதல் மாலை வரை மதுரை மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைத்தார், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார், மேலும் மதுரை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
காலையில் முதலில் மேலமடை சந்திப்பில் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தைத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் நடைபெற்ற அரசு விழாவில் 63,698 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். ரூ.3,065 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைத்தார். மேலும் மதுரை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில், “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், பிரம்மாண்டமான கீழடி அருங்காட்சியகம், உலகத் தரத்தில் ஹாக்கி மைதானம் – இவைதான் நமது #DravidianModel பேசும் மதுரைக்கான வளர்ச்சி அரசியல்!!
இதையும் படிங்க: மதுரைக்கு புத்தம் புது இறக்கை!! வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்!
#AIIMS வராது; #MetroRail தராது; #கீழடி ஆய்வறிக்கையை மறைக்கும் பா.ஜ.க. பேசும் …….. அரசியல். தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும்! வளர்ச்சியின் ஒளி பெருகும்!” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவு திமுக அரசு மதுரையில் செயல்படுத்திய வளர்ச்சித் திட்டங்களை எடுத்துக்காட்டுவதாகவும், மத்திய அரசிடம் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரயில் போன்ற திட்டங்கள் கிடைக்காததைச் சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது. முதலமைச்சரின் இந்த மதுரை பயணமும், நிகழ்ச்சிகளும், எக்ஸ் பதிவும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம்… முதல்வர் ஸ்டாலின் உறுதி…!