ஸ்ட்ராங் ரூம் சர்ச்சை... 10 தொகுதிகளின் வாக்குகள் பாதுகாப்பில் மிகப்பெரிய கேள்விக்குறி... தவெக வேட்பாளர் ஷாக்...!
வால்பாறை தனித்தொகுதி வாக்குகள் காக்கப்பட வேண்டும்., கோவை ஜி சி டி கல்லூரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் கதவுகள் சரிவர சீல் வைக்காததால் வேட்பாளர் அதிர்ச்சி.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.15% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நடந்து முடிந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பான 'ஸ்ட்ராங் ரூம்களில்' வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.
ஸ்ட்ராங் ரூம்களுக்கு மத்திய துணை ராணுவப்படை, மாநில ஆயுதப்படை மற்றும் உள்ளூர் காவல்துறை இணைந்து நான்கு அடுக்கு பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்கு தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. வாக்கு இயந்திரங்களுக்கு பாதுகாப்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் மையங்களுக்கு வெளியே திரண்டுள்ளனர். மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க 100 மீட்டர் சுற்றளவு பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பொள்ளாச்சி அடுத்த வால்பாறை சட்டமன்ற தொகுதி தனித்தொகுதி ஆகும். தேர்தல் வாக்கு பதிவு கடந்த 23ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் கோவை ஜி.சி.டி கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளை பார்வையிடுவதற்காக வால்பாறை சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் ஶ்ரீதர் பாதுகாக்கப்பட்ட அறையின் கதவுகளில் ஒன்று குறுக்கு கட்டைகள் வைத்து சீல் வைக்கப்படாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையும் படிங்க: ஓட்டு போட போனது ஒரு குத்தமா..!! சென்னைக்கான விமான கட்டணம் தாறுமாறு உயர்வு..!! கலக்கத்தில் மக்கள்..!!
இதுதொடர்பாக அவர் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டிய அவர் எழுத்துப்பூர்வமாக தலைமை தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளார். உடனே தேர்தல் அதிகாரிகள் இந்த விஷயத்தை கருத்தில் கொண்டு பத்து தொகுதி வாக்கு பெட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் குறிப்பாக வால்பறை தொகுதி வாக்கு பெட்டி வைக்கப்பட்ட அறை குறுக்கு கட்டைகள் வைத்து பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவுக்கு தாவிய ஹர்பஜன் சிங்..!! போலீஸ் பாதுகாப்பை நீக்கி பஞ்சாப் அரசு அதிரடி..!!