×
 

டெல்லி பறக்கப்போகும் ஆதவ் அர்ஜுனா.. சம்மன் அனுப்பிய போலீஸ்.. என்னதான் நடக்குது..??

தமிழக வெற்றிக் கழக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் தமிழ் வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) வேலுச்சாமிபுரத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் உரையாற்றியதன் பிறகு, ஆதரவாளர்கள் அவரை அணுக முயன்றபோது திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் சிக்கிக் கொண்டனர்.

கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்ததால் கூட்ட நிர்வாகத்தில் குழப்பம் ஏற்பட்டு, நெரிசல் ஏற்பட்டதாக எப்ஃஐஆரில் கூறப்பட்டுள்ளது. தவெக-வின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செயலாளர் பஸ்ஸி எனந்த் ஆனந்த், இணைச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் FIR-ல் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: #BREAKING: விஜய்யின் நீலாங்கரை வீட்டில் போலீசார்.. காரணம் என்ன..??

இந்த சூழலில் இந்த துயரச் சம்பவத்திற்கு பின்னர் முதல்முறையாக த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், என் தாயின் இழப்புக்கு பின்னர் கரூரில் என்னுடைய குடும்பத்தில் 41 பேரின் உயிரிழப்பு மிகப்பெரிய வலியை கொடுத்திருக்கிறது. தற்போது எதையும் பேசக் கூடிய மனநிலையில் நான் இல்லை. இதை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். விரைவில் கரூர் சென்று பொதுமக்களை சந்திப்போம். அவர்களுடன் மிகப்பெரிய பயணம் தொடரும் என்று கூறியிருந்தார். மேலும் இன்று ஆதவ் அர்ஜுனா வீட்டில் போலீசார் குவிந்தனர்.

இதனிடையே ஆதவ் அர்ஜுனா மீது சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ஆதவ் அர்ஜுனா கருத்துகளை பதிவு செய்தார். அது வன்முறையை தூண்டும் விதமாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு பங்கம் எற்படுத்தும் விதமாகவும் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தவெக பரப்புரை பேருந்து கேமராவில் பதிவான காட்சிகளை ஒப்படைக்கக் கோரி அக்கட்சி தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இதேபோல் தவெக துணைப்பொதுச் செயலாளர் நிர்மல் குமாருக்கும் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே தமிழக வெற்றிக் கழக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, அலுவல் பணிகள் மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கெடுப்பதற்காக டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: பேசுற நிலையில இல்ல...கரூர் சம்பவத்திற்கு பின் ஆதவ் அர்ஜுனா முதல்முறையாக பேட்டி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share