×
 

"66 லட்சம் பேர் முகவரி இல்லாமல் போனது வியப்பாக இருக்கிறது!" - ப.சிதம்பரம்

வரைவு வாக்காளர் பட்டியலில் 66 லட்சம் பேர் முகவரி இல்லாமல் போனது வியப்பாக உள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதவாது, தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிரடி நீக்கங்கள் குறித்து, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ஆழ்ந்த கவலையையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, ‘முகவரி இல்லாதவர்கள்’ என்ற போர்வையில் 66 லட்சம் பேர் நீக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இது ஒரு ‘நெருடலாக இருப்பதாகவும் சுட்டிகாட்டியுள்ளார்.  

"தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் இறந்தவர்கள் 26 லட்சம் பேர் மற்றும் இரட்டைப் பதிவுள்ள 3 லட்சம் பேர் என்பதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், முகவரி இல்லாதவர்கள் என்ற பெயரில் 66,44,881 பேர் நீக்கப்பட்டிருப்பதுதான் பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது. 

இவ்வளவு நபர்கள் திடீரென முகவரி இல்லாமல் போனது எப்படி என்பது வியப்பாக இருக்கிறது. மெய்யான எந்த ஒரு வாக்காளரும் பட்டியலில் இருந்து நீக்கப்படக்கூடாது என்பதுதான் நமது நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் 3வது முறை! முன்னாள் அமைச்சர் வீட்டிற்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்..!! போலீஸ் குவிப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் 1.50 லட்சம் பேரும், புதுக்கோட்டையில் 1.39 லட்சம் பேரும் நீக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். 

"காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்கள், வரைவு வாக்காளர் பட்டியலை எடுத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும். முறையான காரணமின்றி ஒருவரின் பெயர் நீக்கப்பட்டிருந்தால், காங்கிரஸ் கட்சியின் நகர அல்லது வட்டாரத் தலைவர்களை அணுகிப் பெயரைச் சேர்க்க உதவி பெறுங்கள். தேர்தல் ஆணையத்தை விட அரசியல் கட்சிகள் விழிப்புடன் இருக்கிறோம் என்பதை நிரூபிக்க வேண்டும்."

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அதிர்ச்சியடைய வேண்டாம் என்றும், சட்டத்தில் வழி இருப்பதால் உரிய படிவங்களைச் சமர்ப்பித்து மீண்டும் பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் வாக்காளர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.


 

இதையும் படிங்க: கனமழை அலர்ட்..!! புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share