×
 

திமுக ஆட்சியின் ஓய்வூதிய திட்ட விதிகள் அமலாகும் வரை இடைக்கால தொகை அறிவிப்பு! தமிழக அரசு உத்தரவு!

தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, விதிகள் மற்றும் நடை முறைகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது.

சென்னை: தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை (TAPS) செயல்படுத்துவதற்கான விதிகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விதிகள் அறிவிக்கப்படும் வரை, 2026 ஜனவரி 1 முதல் ஓய்வு பெறும் தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு இடைக்கால மாதாந்திரத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2003ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (NPS) அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தினர்.

தி.மு.க. ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு பதிலாக ‘டேப்ஸ்’ எனப்படும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கான விரிவான விதிகள் இதுவரை வெளியிடப்படாததால், ஜனவரி முதல் ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஓய்வூதியம் பெற முடியாத சிரமத்தை எதிர்கொண்டனர்.

இதையும் படிங்க: ரூ.400 கோடி முதலீட்டு மோசடி? ஏற்றுமதி நிறுவனம் மீது அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விதிகள் உருவாக்கப்படும் வரை இடைக்கால ஏற்பாடாக மாதாந்திரத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை கணக்கிடும் முறை: ஓய்வு பெறும் போது கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 என இரண்டில் எது அதிகமோ அதனுடன், அகவிலைப்படியில் 50 சதவீதம் சேர்த்து வழங்கப்படும்.

ஓய்வூதியர் மரணமடைந்தால், அவருக்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தொகையில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். இது தற்காலிக ஏற்பாடு மட்டுமே. விதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு இறுதி முடிவு எடுக்கலாம். டேப்ஸ் திட்டத்தில் தொடர விருப்பமில்லை என்றால், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு திரும்பலாம். முதல் 60 நாட்களுக்குள் படிவம் தாக்கல் செய்தால், 15 நாட்களுக்குள் இடைக்காலத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த இடைக்கால உதவி ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. விரிவான விதிமுறைகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: சண்டை செய்ய காத்திருந்த திமுகவுக்கு ஏமாற்றம்!! 2 நாள் பயிற்சி வீணா?! அறிவாலயம் நம்பிக்கை புஸ்ஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share