×
 

இதை ஏன் இத்தன நாளா மறைச்சீங்க முதல்வர் விஜய்?! 40 நாட்களுக்கு பின் வெளிவந்த சீக்ரெட்! எதிர்க்கட்சிகள் விமர்சனம்!

முதல்வர் விஜயின் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாமல், அரசு மறைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை: முதல்வர் விஜய்க்கு தனிப்பட்ட செயலராக (பி.ஏ.) சினிமா மேலாளர் ஜெகதீஷை நியமித்த அரசாணையை 40 நாட்களாக அரசு வெளியிடாமல் மறைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளன. வெளிப்படைத்தன்மை என்று வாக்குறுதி அளித்த முதல்வர் இந்த நியமனத்தை மறைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வருக்கு தனிச் செயலர் நியமிப்பது வழக்கமான நடைமுறை. அதன்படி, தனது சினிமா மேலாளரான ஜெகதீஷ் முதல்வரின் தனிப்பட்ட செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இதற்கான அரசாணை இதுவரை பொதுமக்கள் முன் வெளியிடப்படவில்லை. 

முதல்வர் விஜய் தனது பிறந்தநாளான 22ஆம் தேதி கொண்டாடியபோது, ஜெகதீஷ் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “என்னை முதல்வரின் தனி செயலராக நியமித்ததற்கு நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: சீமான் போராடியதை முடித்துக் கொடுத்த முதல்வர் விஜய்! அரசு பஸ்களில் மீண்டும் இடம் பிடித்தது தமிழ்நாடு!

இந்தப் பதிவின் மூலமாகவே ஜெகதீஷ் மே 12ஆம் தேதியே நியமிக்கப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. த.வெ.க. தரப்பில் கூட இந்த நியமனம் தொடர்பான தகவல் பகிரப்பட்டது. ஆனால் அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிடவில்லை.

இதற்கு முன்பு, முதல்வரின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலை மே 12ஆம் தேதி சிறப்பு அதிகாரியாக நியமித்த அரசாணை எதிர்ப்பைத் தொடர்ந்து உடனடியாக திரும்பப் பெறப்பட்டது. அதே நாளில் ஜெகதீஷ் நியமனம் நடைபெற்றிருப்பது இப்போது வெளியாகியுள்ளது.

முதல்வர் பதவியேற்றபோது “வெளிப்படையான அரசு” அமைப்பதாக உறுதியளித்த விஜய், தனது சொந்த பி.ஏ. நியமனத்தையே மறைத்திருப்பது மிகப் பெரிய முரண்பாடு என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இது அரசின் நம்பகத்தன்மையை பாதிக்கும் செயல் என அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த சர்ச்சை தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் நியமனங்கள் குறித்து இனி மிகுந்த கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: Breaking! திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட 500 மின்சார பஸ் டெண்டர் ரத்து! அடுத்தடுத்து அதிரடி காட்டும் தவெக அரசு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share