×
 

1.6 கிலோ வெள்ளி வாள்! எம்.ஜி.ஆர் பாணியில் விஜய் காணிக்கை! கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை கோயிலில் வழிபாடு பின்னணி!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகா தேவி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு தமிழக முதல்வர் விஜய் சென்று சிறப்பு வழிபாடு செய்தது பக்தர்களிடையும் அரசியல் வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. பதவியேற்ற பிறகு அவர் மேற்கொண்ட முக்கிய ஆன்மிகப் பயணங்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட முதல்வர் விஜய், தனி விமானம் மூலம் மங்களூரு சென்றார். அங்கிருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தை சாலை மார்க்கமாக கடந்து உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்றடைந்தார். கோயில் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

கோயிலில் சுமார் அரை மணி நேரம் தங்கி சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டில் பங்கேற்ற முதல்வர் விஜய், அம்மனை தரிசித்து அருளாசி பெற்றார். வழிபாட்டின் நிறைவாக 1.6 கிலோ எடையுள்ள வெள்ளி வாளை காணிக்கையாக கோயிலுக்கு வழங்கினார். இந்த காணிக்கை பக்தர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: கொல்லூர் மூகாம்பிகையிடம் விஜயின் வேண்டுதல் இதுவா?... பின்னணியில் இருக்கும் அதிரடி காரணம்...!

கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயில் தமிழக அரசியல் தலைவர்களுடனும் நீண்டகால ஆன்மிக தொடர்பு கொண்டதாக கருதப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அம்மனுக்கு சுமார் 2.5 அடி நீளமுள்ள தங்க வாளை காணிக்கையாக வழங்கியிருந்தார். அதேபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் பலமுறை இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டதுடன், சண்டிகா யாகம் நடத்தி சிறப்பு பூஜைகளில் பங்கேற்றிருந்தார்.

அந்த வரிசையில் தற்போது தமிழக முதல்வர் விஜயும் மூகாம்பிகை அம்மன் கோயிலில் தரிசனம் செய்திருப்பது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பதவியில் இருக்கும் நிலையில் இந்த கோயிலுக்கு வருகை தந்த தமிழக முதல்வர்களின் பட்டியலில் விஜய் இடம்பெற்றுள்ளார்.

முதல்வரின் வருகையையொட்டி கோயில் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்களின் தரிசனத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

மூகாம்பிகை அம்மன் கோயிலில் விஜய் நடத்திய சிறப்பு வழிபாடு மற்றும் வெள்ளி வாள் காணிக்கை தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இதையும் படிங்க: டெல்லி அரசியலிலும் சிக்சர் அடித்த விஜய்! அசந்து போன மோடி, அமித்ஷா! தரமான சம்பவம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share