×
 

ஸ்டூடண்ட் எலெக்சன் இனி நடத்தலாம்! மாணவர்கள் மூலம் கல்லூரி, பல்கலையில் நுழைய தவெக திட்டம்!!

மாணவர் பேரவை தேர்தலை நடத்தி, கல்லுாரிகளுக்குள் நுழைய, தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் மாணவர் பேரவை தேர்தலை நடத்தி, கல்லூரி அரசியலை வலுப்படுத்த தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த கோரிக்கையை வலுவாக முன்வைத்துள்ளன.

கடந்த 19-ம் தேதி மார்க்சிஸ்ட் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். சார்பிலான ஏ.பி.வி.பி. நிர்வாகிகள் முதல்வர் விஜயை தனித்தனியே சந்தித்து, தமிழகத்தின் எல்லா கல்வி நிறுவனங்களிலும் மாணவர் பேரவை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

 இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: “1967-ல் மாணவர்களின் ஆதரவுடன் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு கல்லூரிகளில் அரசியலை அனுமதிக்கவில்லை. 59 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பெரும் ஆதரவுடன் விஜய் ஆட்சியைப் பிடித்துள்ளார். 

இதையும் படிங்க: குதிரை பேரமா.?- சிபிஐ விசாரணைக்கு ரெடி.. பதவி விலகிய பெருந்துறை எம்எல்ஏ சவால்..!

மாணவர்களுக்கு அரசியல் புரிதல் இருந்தால்தான் இளைஞர்கள் அரசியலுக்கு வருவார்கள். எனவே அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் மாணவர் பேரவை தேர்தலை நடத்த வேண்டும்” என்றார்.

த.வெ.க. வட்டாரங்கள் இந்த கோரிக்கையை நிறைவேற்ற சாதகமாகப் பார்க்கின்றன. மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றால் கல்லூரிகளுக்குள் த.வெ.க.வின் அரசியல் செல்வாக்கை அதிகரிக்க முடியும் என முதல்வர் விஜய் நினைப்பதாகக் கூறப்படுகிறது. அமைச்சரவையில் இடம்பெறாத கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாணவர் பேரவை தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இப்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஜனநாயக உரிமையை வழங்கும் வகையில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாணவர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும், அவர்களை அடுத்த தலைமுறை தலைவர்களாக உருவாக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

த.வெ.க.வின் இந்த நடவடிக்கை தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் எனக் கூறப்படுகிறது. எஸ்.எப்.ஐ. மற்றும் ஏ.பி.வி.பி. போன்ற மாணவர் அமைப்புகளும் இந்த முடிவை வரவேற்றுள்ளன. முதல்வர் விஜய் விரைவில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையும் படிங்க: குதிரை பேரம் சர்ச்சை... கொதிக்கும் அதிமுக..!! ஆளுநரிடம் முறையீடு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share