×
 

பிப்., 5-ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை! பிப்.,13ல் இடைக்கால பட்ஜெட்! எகிறும் எதிர்பார்ப்பு!

தமிழக சட்டசபை தேர்தல் வரும் சூழலில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பிப்ரவரி 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

சென்னை: தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான முக்கிய ஆலோசனைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 5-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டம் ஜனவரி 20-ஆம் தேதி தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தி கூட்டத்தை தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேசிய கீதம் இசைக்கப்படாததால் அதிருப்தி தெரிவித்த கவர்னர் சபையிலிருந்து வெளியேறினார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு அரசின் உரையை வாசித்தார். அதன் பிறகு நடந்த விவாதங்கள் முடிந்து சபை ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது சபை மீண்டும் கூட உள்ளது. அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 13 அல்லது 14-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இதற்கு முன்பாகவே அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ₹3500 கோடியில் லட்சம் வீடா? இது எப்படி சாத்தியம்? ஸ்டாலின் அறிவிப்பால் குழப்பம் அதிகாரிகள்!

இடைக்கால பட்ஜெட்டில் தேர்தல் ஆண்டு என்பதால் மக்கள் நலத் திட்டங்கள், விலைவாசி கட்டுப்பாடு, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான சிறப்பு திட்டங்கள், விவசாயிகள் நலன், கல்வி-சுகாதாரம் ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சியும், புதிய அறிவிப்புகளும் இடம்பெறலாம்.

இந்த இடைக்கால பட்ஜெட் தேர்தலுக்கு முன் மக்களுக்கு அரசின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தமிழக அரசியலை சூடுபிடிக்கச் செய்யும். பட்ஜெட் தாக்கல் மற்றும் அதன் மீதான விவாதங்கள் தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 

இதையும் படிங்க: படர் தாமரை உடலுக்கு நாசம்! பாஜக தாமரை நாட்டுக்கே நாசம்! இபிஎஸ் - டிடிவி-யை வச்சு செய்யும் கருணாஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share