தள்ளிப்போகிறதா தமிழக தேர்தல்?! ஏப்ரலில் இல்லையா? மார்ச் 2வது வாரம் வெளியாகும் முக்கிய அறிவிப்பு?!
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகள் உட்பட, ஐந்து மாநிலங்களில் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும், ஐந்து கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில/யூனியன் பிரதேசங்களின் சட்டசபை பதவிக்காலம் வரும் மே மாதத்தில் முடிவடைகிறது. தமிழகத்தில் 234 தொகுதிகள் உட்பட மொத்தம் 824 தொகுதிகளுக்கு புதிய அரசுகளை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையம் (ECI) 5 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக 714 ஐஏஎஸ் அதிகாரிகள், 233 ஐபிஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாகவும், 497 செலவின பார்வையாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2021 ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடந்து, மே 2-ஆம் தேதி ஓட்டு எண்ணப்பட்டது. அப்போது கொரோனா காரணமாக ஏப்ரல் மாதம் முன்கூட்டியே நடத்தப்பட்டது.
ஆனால் இம்முறை மே மாதத்தில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மே மாதத்தில் கத்திரி வெயில் தீவிரமடைவதால், 2016-ல் மே மாத தேர்தலில் வேட்பாளர்கள், கட்சியினர், வாக்காளர்கள் அனைவரும் கடும் வெப்பத்தில் அவதிப்பட்டனர்.
இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? யாரோடு கூட்டணி வைப்பது? டெல்லியில் காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை!!
2021-ல் வெயில் தீவிரமாவதற்கு முன் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. இப்போது மீண்டும் மே மாதம் தேர்தல் என்றால் வாக்காளர்கள், பணியாளர்கள் பாதிக்கப்படுவர் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்ளிட்ட 15 அதிகாரிகள் கொண்ட குழு இன்று இரவு சென்னை வருகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உட்பட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.
தேர்தல் ஆணைய வட்டாரங்கள்: "பல தேர்தல்கள் மே மாதம் நடந்துள்ளன. வெயிலை வைத்து தேதி முடிவு செய்ய முடியாது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கருத்துக்களை கேட்ட பிறகே தேதி முடிவு" என்கின்றனர். ஆனால் அடுத்த மாத முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் அட்டவணை, இரண்டாவது வாரத்துக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளது.
மார்ச் நடுப்பகுதியில் (மார்ச் 4-8) தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும் என தகவல்கள் உள்ளன. வாக்குப்பதிவு ஏப்ரல் முதல் வாரத்தில் (ஏப்ரல் 3-7) நடைபெற வாய்ப்பு. தமிழகத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் வெயில் அதிகமாக இருக்கும். வெயில் காரணமாக தேர்தல் தேதி மாற்றப்படுமா என்பது ஆலோசனைக்குப் பிறகே தெரியும்.
தேர்தல் நெருங்கும் நிலையில் வெயில் vs தேர்தல் என்ற பிரச்னை மீண்டும் விவாதமாகியுள்ளது. வாக்காளர்களின் வசதி முதன்மையாக இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.
இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு!! ஏப்., 2ம் வாரம் சட்டசபை தேர்தல்!! எலெக்சன் கமிஷன் திட்டம்!