×
 

பெண் கூச்சலிட்டும் கொடூரத்தை நிறுத்தாத திமுக நிர்வாகி!! தீயாய் பரவும் வீடியோ!! அண்ணாமலை உடைத்த பகீர் உண்மை!

கள்ளக்குறிச்சியில் நாய் குரைத்த ஆத்திரத்தில் ஒரு குடும்பத்தையே திமுக இளைஞர் அணி நிர்வாகி அடித்து உதைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திமுக இளைஞர் அணி நிர்வாகியும் வார்டு கவுன்சிலருமான ரமேஷ் தலைமையிலான கும்பல், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவரது குடும்பத்தினரை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து வெளியான வீடியோவில், திமுக நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் குடும்பத்தினரை கை, கால், தடி போன்றவற்றால் அடித்து உதைப்பது தெளிவாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் கதறி அழுது கூச்சலிட்டபோதும் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்துள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு காரணம் மிகவும் அதிர்ச்சி தரக்கூடியது. அந்த குடும்பம் வளர்க்கும் நாய், திமுக நிர்வாகியைப் பார்த்து குரைத்ததால் ஆத்திரமடைந்த அவர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து குடும்பத்தினரை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளார்.

இதையும் படிங்க: அருவருப்பா இல்லையா முதல்வர் ஸ்டாலின்? இது பொதுமக்களின் உயிர்!! அண்ணாமலை ஆவேசம்!

இந்த வீடியோவை தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

 

Under the DMK regime, the menace to public safety no longer comes merely from rowdies and goondas; DMK functionaries pose a larger threat to the people of our state.

In Kallakurichi district, Ramesh, a DMK Youth Wing functionary and Ward Councillor, along with his henchmen,… pic.twitter.com/91leBnUjOh

— K.Annamalai (@annamalai_k) January 12, 2026

“திமுக ஆட்சியில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ரவுடிகள், குண்டர்களால் மட்டுமல்ல – திமுக நிர்வாகிகளாலும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நாய் குரைத்ததற்காக ஒரு குடும்பத்தையே அடித்து உதைக்கும் அளவுக்கு சட்டம் மதிக்கப்படவில்லை. இந்த ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டப்படும்.”

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், கட்சி நிர்வாகிகளுக்கு தண்டனை அச்சமின்றி செயல்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நீலகிரிக்கு ராகுல் காந்தி வருகை... மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share