ஜெயலலிதா ஓட்டுவங்கி டார்கெட்! பாஜக பக்கா ப்ளான்!! மகளிரை தங்கள் பக்கம் இழுக்க மாஸ்டர் ப்ளான்!
அ.தி.மு.க. தலைமையிலான தே.ஜ கூட்டணியில் உள்ள பா.ஜ.வும், ஜெயலலிதா மீது பற்றுள்ள மகளிர் ஓட்டுகளை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.
தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி. இதில் பெண்கள் 2.90 கோடி பேர் – அதாவது 51%க்கும் மேல்! 2026 சட்டமன்ற தேர்தலில் மகளிர் ஓட்டுகள் தான் தீர்மானகரமாக இருக்கும் என்பதால், தி.மு.க., அதிமுக, பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தி.மு.க. அரசு, மகளிர் உரிமைத்தொகை பெறும் 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்கில் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி சிறப்பு தொகையாக 5,000 ரூபாய் செலுத்தியது. இதில் 3,000 ரூபாய் மூன்று மாத முன்பணமாகவும், 2,000 ரூபாய் கோடை கால சிறப்பு உதவியாகவும் வழங்கப்பட்டது.
இது பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. "தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு, அதிகாரம்" என்ற பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தவெகவுக்கு தாவிய மகன்!! மாஜி அமைச்சர் தர்மசங்கடம்!! அதிமுக ஐடி விங் டு விஜய் கட்சி! முன்னாள் சபாநாயகர் மகன் ஜம்ப்!
இதற்கு போட்டியாக அதிமுக தலைமையிலான தே.ஜ.கூட்டணியும், குறிப்பாக பாஜகவும் ஜெயலலிதா மீது பெண்களுக்கு இருக்கும் பாசத்தை பயன்படுத்த முயல்கின்றன. ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ஐ முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழக பாஜக நிர்வாகிகள் வரை அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் மோடி X-இல் வெளியிட்ட பதிவில்: "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைசிறந்த நிர்வாகியாக மக்களின் இதயங்களில் இடம்பிடித்தார். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார். கருணையும் உறுதியும் கொண்டவர்" என்று புகழ்ந்தார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் கட்கரி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து பதிவிட்டனர். பாஜக வட்டாரங்கள்: "ஜெயலலிதா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தது. அவர் மீது மகளிருக்கு என்றும் பாசம் உண்டு. மோடியும் ஜெயலலிதாவும் நெருங்கிய நண்பர்கள். அனுதாப ஓட்டுகளை முழுமையாக தே.ஜ.கூட்டணிக்கு திருப்புவதற்கான திட்டங்கள் உள்ளன" என்கின்றனர்.
அதிமுகவும் பெண்களுக்கான பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது. தி.மு.க.வின் உரிமைத்தொகைக்கு எதிராக "அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு, வேலைவாய்ப்பு" என்று பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசியலில் மகளிர் ஓட்டுகள் தான் 'கிங் மேக்கர்' என்பது தெளிவாகியுள்ளது. உரிமைத்தொகை vs ஜெயலலிதா அனுதாபம் – இந்த இரு பெரும் சக்திகளுக்கு இடையேயான போட்டி தேர்தல் களத்தை சூடுபிடிக்கச் செய்துள்ளது. பெண்கள் யாரை ஆதரிப்பார்கள் என்பதை பொறுத்தே அடுத்த ஆட்சி அமையும்!
இதையும் படிங்க: விருப்பமனு வித்தது 50,000, வந்தது எவ்வளவு? தவெகவுக்கு தீராத தலைவலி! அப்செட்டில் விஜய்!!