×
 

சங்கீதாவுக்கு நடப்பது கொடுமை... நியாயம் கிடைக்கணும்..!! தமிழிசை ஆதரவு குரல்..!!

விஜய் மனைவி சங்கீதா கொடுமைப்படுத்தப்படுவதாகவும் அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாக கூறி அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். நடிகை ஒருவருடன் விஜய் தொடர்பில் இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மனைவி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், நீலாங்கரை வீட்டில் தன்னை அனுமதிக்க விஜய் மறுப்பதாக சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். தன்னை வீட்டிற்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக்கூறி சங்கீதா மனுவில் கோரிக்கை விடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. விஜய் வசிக்கும் நீலாங்கரை இல்லத்தில் தனக்கு சரி பாதி உரிமை இருப்பதாகவும் சங்கீதா முறையிட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

விஜய் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் நியாயமாக சேர வேண்டியதை வழங்க வேண்டும் எனவும் சங்கீதா தரப்பில் வலியுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில் நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதி மறுப்பதால் சென்னையில் வீடு இல்லாமல் தவிப்பதாக சங்கீதா தரப்பில் கூறப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க: ஸ்டாலின் செட்டில்மெண்ட் மூலம் எப்போ ஊழலை சொல்ல போறீங்க? தமிழிசை சரமாரி கேள்வி..!!

சங்கீதா கொடுமைப்படுத்தப்படுவதாக தமிழிசை கருத்து தெரிவித்தார். விஜய் - சங்கீதா விவகாரம் தனிப்பட்ட விஷயம் என்பதால் பெரிதாக அதில் தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். இருப்பினும் நாளை மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் சங்கீதா போன்றவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார். சங்கீதா கொடுமைப்படுத்தப்படுகிறார் என்றும் அவருக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உங்க வாயால அந்த வார்த்தையா? கொச்சைப்படுத்திடீங்க ஓபிஎஸ்..! தமிழிசை ஆதங்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share