×
 

“இதுவே மோடியோட நிர்வாகத் திறமை தான்”... பெட்ரோல், டீசல் விலை குறித்து தமிழிசை செளந்தரராஜன் கருத்து...!

சிலிண்டர் விலை உயர்வு தற்காலிகமானது என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

கருத்துக் கணிப்புகள் ஒரு மாதிரியாக உள்ளதா, ஒரு மாதிரியாஆக உள்ளதா என இழுவையாக கேள்வி, exit polls are not exact polls, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் சரியானவை அல்ல, 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும்

உலக அளவில் போர் நடந்து கொண்டிருக்கிறது. பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயரவில்லை, பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பது பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமை. வர்த்தக ரீதியிலான சிலிண்டர் விலை உயர்வு என்பது தற்காலிகமான மாற்றம் மட்டுமே. 

5 மாநில தேர்தல் முடிந்த பிறகு விலை ஏற்றம் ஏன் என்ற கேள்விக்கு போர் எப்போது நடந்து கொண்டிருக்கிறது, போரின் தாக்கம் எப்போது இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். நமது நாட்டை பிரதமர் பாதுகாப்பாக வைத்துக் கொண்டுள்ளார். திமுகவிற்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் வந்தால் உங்கள் நிலைப்பாடு என்ற கேள்விக்கு, மக்கள் எங்களுக்கு சாதகமாக வாக்குகளை தந்திருப்பார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: பணியில் இருக்க வேண்டிய நேரத்தில் ஓய்விற்கு செல்கிறார்கள்..!! முதல்வர் ஸ்டாலினை வம்பிழுத்த தமிழிசை..!!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மீஞ்சூர் அடுத்த மேலூர் பகுதியில் உள்ள திருவுடையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். 
 

இதையும் படிங்க: ஆழ்வார்பேட்டையில் கள்ள ஓட்டு... திமுகவினர் மீது தமிழிசை பரபரப்பு குற்றச்சாட்டு... வெடித்தது போராட்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share