×
 

விஜய் நடிகரா இருந்தா டெல்லிக்கு அழைத்திருப்போம்! பராசக்தி படக்குழு விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்!

விஜய் இன்னும் நடிகராகவே இருந்திருந்தால் அவரையும் டெல்லிக்கு அழைத்திருப்போம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடியின் பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்றது பாஜகவிற்குப் பெரும் சக்தியை அளித்துள்ளது என்றும், ஒருவேளை விஜய் இன்னும் நடிகராகவே இருந்திருந்தால் அவரையும் டெல்லிக்கு அழைத்திருப்போம்” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் பாஜக நிர்வாகிகளுடன் இணைந்து இன்று தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் வைத்து விழாவைக் கொண்டாடினார். அப்போது பாஜக மகளிர் அணியினருடன் இணைந்து ‘மோடி பொங்கல்’, ‘என்டிஏ பொங்கல்’ என முழக்கமிட்டபடி அவர் உற்சாகமாக நடனமாடினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் சூழல், விஜய்யின் புத்தாண்டு வாழ்த்து மற்றும் டெல்லி பொங்கல் விழா குறித்த பல்வேறு அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, டெல்லியில் பிரதமர் மோடி நடத்திய பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்றதை வெகுவாகப் பாராட்டினார். பராசக்தி படத்தில் காங்கிரஸின் கோர முகத்தைக் காண்பித்திருப்பது வரவேற்கத்தக்கது; அக்குழுவினரின் வருகை பாஜகவை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்றார். நடிகர் விஜய் குறித்துப் பேசுகையில், விஜய் இன்னும் நடிகராக இருந்திருந்தால் அவரையும் டெல்லிக்கு அழைத்திருப்போம்; ஜனநாயகன் திரைப்படம் வெளியானால்தான் எங்களுக்குப் பொங்கல் என அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள், அவர்களோடு சேர்ந்து நாமும் பொங்கலைக் கொண்டாடுவோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிபிஐ விசாரணை முடிந்து சென்னை திரும்பும் விஜய்... 4 மணி நேரம் சிபிஐ தொடர் விசாரணை...!

தமிழக அரசு தை மாதத்தைத் தமிழ் புத்தாண்டாக அறிவித்துள்ளதைக் கடுமையாகச் சாடிய அவர், சித்திரை ஒன்றுதான் உண்மையான தமிழ் புத்தாண்டு; விஜய்க்கு யாரோ தவறாகக் கூறிவிட்டார்கள், அவர் தேர்தல் காரணத்திற்காகத் தை மாதத்தைத் தமிழ் புத்தாண்டு எனச் சொல்லியிருக்கலாம் எனக் குறிப்பிட்டார். மேலும், திரிபுராவில் அமித்ஷா திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தது இவர்களுக்குப் பிரச்சனையாகத் தெரிகிறது; திருவள்ளுவரை பாஜக கையில் எடுத்துவிட்டதே என்பதுதான் திமுகவின் பயம் என்றார். தயாநிதி மாறன் வடமாநில பெண்களைக் கொச்சைப்படுத்துவதாகவும், புதிய கல்விக் கொள்கை குறித்து உதயநிதி ஸ்டாலின் முரணான கருத்துக்களைத் தெரிவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்தி திணிப்பு மற்றும் இலங்கைத் தமிழர் படுகொலைக்குக் காரணமான திமுகவும் காங்கிரஸும் இன்று கூட்டணிக்காகப் பராசக்தி படம் குறித்துப் பேசுவது வேடிக்கையாக உள்ளது என விமர்சித்த தமிழிசை, தமிழகமே விரைவில் பிரதமர் மோடியுடன் இணையப் போவதாகத் தனது பேட்டியை நிறைவு செய்தார்.

இதையும் படிங்க: டெல்லியில நடக்குறது விசாரணையா? இல்ல டீலா? பாஜக-விடம் விஜய் சரணாகதி? காங்கிரஸ் கிளப்பும் புதுப் புகார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share