×
 

பெண்ணை தீண்ட நினைக்கும் கைகள் தீய்ந்து போகட்டும்..! பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை வரவேற்ற தமிழிசை..!

பெண்களை தீண்ட நினைக்கும் கைகள் தீய்ந்து போகட்டும் என பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பை வரவேற்று தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக தீங்கு இழைப்பவர்களுக்கு இது போன்ற தீர்ப்பு அவசியம் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளதாகவும் அனைவரும் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் பொள்ளாச்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட சாகும்வரை ஆயுள் தண்டனை என்ற தீர்ப்பை தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றுள்ளார். 

இதையும் படிங்க: பெருங்கொடுமைக்கு கிடைத்த நீதி.. பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு..!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், மலர் போன்று இருந்த பெண்கள்.. கசக்கி வீசப்பட்ட பொள்ளாச்சி வழக்கில் இன்று தீர்ப்பு வந்திருக்கிறது. குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது இந்த வழக்கின் தீர்ப்பு வருங்காலத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கக்கூடாது என்பதற்கு அடித்தளமாக அமையட்டும் என கூறினார். 

தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கப்படும் கண்கள் பொசுக்கப்படட்டும் பெண்களைத் தவறாக தீண்ட நினைக்கும் கைகள் தீய்ந்து போகட்டும். பெண்களைத் தவறாக பார்க்கும் எண்ணம் சிதைந்து போகட்டும். இந்த தீர்ப்பு பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தீர்த்து வைக்கட்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: EPS நடவடிக்கையால் தான் நீதி கிடைத்துள்ளது.. பொள்ளாச்சி வழக்கு குறித்து அதிமுக கருத்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share