×
 

அரசியல் தலையீடுகளுக்கு ஃபுல் ஸ்டாப்! ஊழலுக்கு ஆப்பு! வீட்டுவசதி வாரிய பணிகளுக்கு இனிமேல் 'இ-டெண்டர்' மட்டுமே!!

வீட்டுவசதி வாரிய திட்ட பணிகளுக்கு, இனி 'இ - டெண்டர்' முறை மட்டுமே கடைப்பிடிக்கப்பட உள்ளது.

தமிழக வீட்டுவசதி வாரியத்தின் கீழ் நடைபெறும் அனைத்து திட்டப் பணிகளுக்கும் இனி முழுக்க ‘இ-டெண்டர்’ (e-Tender) முறை மட்டுமே பின்பற்றப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவு கட்டுமானப் பணிகள், கலந்தாலோசகர் தேர்வு, வணிக மனைகள் மற்றும் குடியிருப்பு மனைகள் விற்பனை உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் பொருந்தும்.

தற்போது வீட்டுவசதி வாரியம் பல மாவட்டங்களில் பெரிய அளவில் குடியிருப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. டெண்டர் அறிவிப்புகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டாலும், விருப்ப மனுக்கள் பெறுதல் உள்ளிட்ட சில முக்கிய பணிகள் அலுவலகத்தில் நேரடியாக நடைபெற்று வந்தன. 

இதனால் அரசியல் தலையீடு அதிகரித்தது. சில திட்டங்களில் கட்டுமானப் பணிகள் தாமதமாகவும், காலி மனைகள் விற்பனையாகாமலும் இருந்த சூழல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: தினமும் ஒருமணி நேரம் பயிற்சி! துறை பற்றி கற்றுக் கொள்ள அமைச்சர்கள் ஆர்வம்!

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தமிழக அரசு டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் வீட்டுவசதி வாரியத்துக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “இ-டெண்டர் முறையை முழுமையாக அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இனி அரசியல் தலையீட்டுக்கு இடமில்லை. அனைத்து பணிகளும் தெளிவான முறையில், வெளிப்படையாக நடைபெறும்” என்றார்.

இந்த புதிய முறை அமலுக்கு வந்தால், தகுதியான நிறுவனங்கள் மட்டுமே பணிகளைப் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும். திட்டங்கள் விரைவாக முடிக்கப்படும். குடியிருப்பு மனைகள் மற்றும் வணிக இடங்கள் விற்பனையும் சீராக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரசுக்கு நிதி இழப்பு தவிர்க்கப்பட்டு, மக்களுக்கு தரமான வீட்டு வசதி திட்டங்கள் கிடைக்கும்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை, வீட்டுவசதித் துறையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். இ-டெண்டர் முறை முழுமையாக செயல்படுத்தப்பட்ட பிறகு, ஒவ்வொரு திட்டத்தின் முன்னேற்றமும் பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில் வெளிப்படையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றம் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு புதிய பலத்தை அளிக்கும் என்று கருதப்படுகிறது.

இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share