×
 
☰

#BREAKING உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகிறதா தமிழ்நாடு? - 1000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொள்முதல்...!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்டப் பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன..

தமிழகத்தில் அடுத்தகட்டமாக உள்ளாட்சித் தேர்தல் 2027-ஆம் ஆண்டு நடைபெற வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இந்தத் தேர்தலை நடத்துவதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலம் 2 அலுவலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, புதிதாகக் கொள்முதல் செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு அலகுகள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதத் தணிக்கைத் தட அலகுகள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திக்...! திக் திருப்பம்...!! - EVM திறக்கப்பட்டது...!! - டாப் கியரில் தவெக... துரத்தும் அதிமுக... திணறும் திமுக...!

முன்னதாக, தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறை நடைமுறையில் இருந்தது. அதன்பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, படிப்படியாகப் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படத் தொடங்கின. தேர்தலுக்கு முன்னதாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொள்முதல் செய்வது, அவற்றை ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகள் வழக்கமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 1996, 2001, 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அதன்பிறகு, 2019 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டன.

இந்தச் சூழலில், அடுத்தகட்ட உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்து, வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் புதிய ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அடுத்தகட்டமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: நள்ளிரவில் அரங்கேறிய அபாயம்... நடுக்கடலில் தத்தளித்த உயிர்கள்... மெக்சிகோ படகு விபத்தில் 11 பேர் மாயம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share