டாஸ்மாக் மது மீதான கட்சி நிதி அரசுக்கு மாற்றம்!! ஆண்டுக்கு ரூ.1,200கோடி கூடுதல் வருவாய்! முதல்வர் விஜய் அதிரடி!
'டாஸ்மாக்' நிறுவனத்திற்கு மதுபானங்கள் வழங்கும் ஆலைகள், முந்தைய ஆட்சியாளர்களுக்கு, மாதந்தோறும் 51 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கமிஷனாக கொடுத்தது தெரியவந்தது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் தொடர்பாக முக்கிய மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து பல ஆண்டுகளாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் கமிஷன் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்த தொகையை நேரடியாக அரசின் வருவாயாக மாற்றும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக பல்வேறு மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த நிலையில், முந்தைய ஆட்சிக் காலங்களில் மதுபான பெட்டிகளுக்கு தனியாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் தொகைகள் அரசின் கணக்கில் சேராமல், வேறு வழிகளில் சென்றதாக தகவல்கள் வெளியானது.
இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு சென்றதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி புதிய நடைமுறைக்கு ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, இனி மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு மது பெட்டிக்கும் ரூ.90, பீர் பெட்டிக்கு ரூ.40 மற்றும் ஒயின் பெட்டிக்கு ரூ.20 வீதம் கூடுதல் கட்டணமாக அரசுக்கு செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மூடுவிங்களா மாட்டீங்களா...? - கையில் மண்ணெண்ணெய் கேனுடன் களமிறங்கிய பெண்கள்... அந்தியூரில் உச்சக்கட்ட பரபரப்பு...!
அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த கட்டணம் அரசின் அதிகாரப்பூர்வ வருவாயாக பதிவு செய்யப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.1,000 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகை நேரடியாக அரசின் கஜானாவுக்கு செல்லும் வகையில் விதிமுறைகளிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் சில்லரை விலையில் எந்த மாற்றமும் இருக்காது என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, இந்த புதிய கட்டணத்தின் தாக்கம் நேரடியாக நுகர்வோருக்கு ஏற்படாது என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், முறைகேடுகளை தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் இந்த முடிவை சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வரவேற்று வருகின்றனர். டாஸ்மாக் வருவாய் நிர்வாகத்தில் இது முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் விவகாரத்தில் விஜய் ஆக்ஷன் MODE..! அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை..!!