×
 

#BREAKING ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்... டாஸ்மாக் மோசடி வழக்கில் திடுக் திருப்பம்... அடுத்த முக்கிய புள்ளி தலைமறைவு?

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை அணுகிய போது விசாகனின் செல்போன் ஸ்வீட் ஆப் செய்யப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான கொள்முதல், டெண்டர் ஒதுக்கீடு மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. "பார்ட்டி பண்ட்" என்ற பெயரில் தனியாக பணம் வசூலிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று ஒரே நேரத்தில் 41 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்பட ஆறு இடங்களிலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கின் அதிரடித் திருப்பமாக, கரூரைச் சேர்ந்த செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளி ரமேஷ் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கடந்த ஜூலை 3ம் தேதி கைது செய்து, முதன்மைச் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.  இந்த வழக்கில் முதலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்து விசாரணையைத் தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று முன் ஜாமீன் பெற்றுள்ளார். 

இதனால் 2வது நபராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குநர் விசாகனை விசாரணைக்கு எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குநர் விசாகன் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் முறைகேடு புகாரில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாகனை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டிருந்தது. இதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை அணுகிய போது விசாகனின் செல்போன் ஸ்வீட் ஆப் செய்யப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

நேற்று முன்தினம் கைதானோர் அளித்த வாக்குமூலத்தில் அடிப்படையில் விசாகனை விசாரிக்கத் திட்டமிட்ட நிலையில், போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். 
 

இதையும் படிங்க: #BREAKING: டாஸ்மாக் முறைகேடு.! செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின்..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!!

 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share