பள்ளியில் ஆசிரியைக்கு நடந்த கொடூர சம்பவம்... அதிர்ச்சியில் சேலம் மக்கள் ...நடந்தது என்ன?
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து மாணவர்களுக்கு முன்பாக அரசு பள்ளி ஆசிரியை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பி ஓடிய அவரது கணவர் விஜயமுருகனை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஸ்ரீவித்யா (44). இவர் இன்று பள்ளிக்குள் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போது , திடீரென புகுந்த அவரது கணவர் விஜய முருகன் , ஆசிரியையை தலை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ஆசிரியை வித்யா ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.
அப்போது பள்ளி மாணவ மாணவிகள் பயந்து வெளியே ஓடி வந்துள்ளனர். மனைவி வெட்டி கொலை செய்த கணவர் , அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து தகவல் அறிந்த ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் மற்றும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலையுண்டு கிடந்த ஆசிரியையின் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அங்கு விசாரணை நடத்தினர் . இந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ஸ்ரீவித்யாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தைச் சேர்ந்த , ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற விஜயமுருகன் (42) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு மூன்று வயதில் சிவசுந்தரி என்ற பெண் குழந்தை உள்ளது. விஜயமுருகன் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: ஹார்முஸை திறக்க 40 நாடுகள் கூட்டணி! பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் அதிரடி அறிவிப்பு!
மேலும் ஆசிரியை ஸ்ரீவித்யா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளதும் ,
சில தினங்களுக்கு முன்பு மனைவி ஸ்ரீவித்யாவை சந்தேகப்பட்டு கெட்ட வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியதாகவும், சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என அப்போதே மிரட்டி விட்டு குழந்தையை எடுத்துக்கொண்டு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி போலீசில் ஏற்கனவே புகார் அளித்து இருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் கணவரை பிரிந்து ஒரு மாதமாக ஓமலூர் பகுதியில் குடியிருந்து கொண்டு பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் தான், இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் , தப்பி ஓடிய அவரது கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஓமலூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து பள்ளி ஆசிரியை வெட்டிக்கொன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ராசிபுரம் வரை பரவிய கோபாலபுர ஊழல்! பஸ் வசதி கூட இல்லை என அண்ணாமலை தாக்குதல்!