திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறியா?... யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த தங்க தமிழ்ச்செல்வன்...!!
வெற்றி பாதையில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது மேலும் ஒரு மணிமகுடம் - தங்கதமிழ்ச்செல்வன் கருத்து
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டி - மணல்பட்டியில் சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலை கடையை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்ச்செல்வன், வெற்றி பாதையில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது மேலும் ஒரு மணிமகுடம் என்று தான் சொல்ல வேண்டும். நல்ல கூட்டணி திமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்ததை பெருமையாக நினைக்கிறோம். வரவேற்கக்கூடிய செய்தி. திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.
காங்கிரஸ் இழுபறியில் இருப்பதாக ஊடகத்தினர் தான் சொல்கிறார்கள் எங்களுக்கு எந்த மாதிரியும் தெரியவில்லை. காங்கிரஸ் எங்களை விட்டு போகாது, எங்களோடு தான் இருக்கும். மத்தியில் பாஜகவை எதிர்த்து போராடுகிறோம் என்றால் காங்கிரஸுக்காக தான் போராடுகிறோம், எங்களுக்காக அல்ல.அதை புரிந்து கொண்டு எங்களோடு தான் தொடர்வார்கள். அதில் மாற்று கருத்து இல்லை.
தினகரனும் சசிக்கலாவும் சேர்ந்து தான் அதிமுகவை அநியாம் செய்து ஒன்றும் இல்லாம ஆக்கிவிட்டார்கள். இன்று எதிரி, சூழ்ச்சி என்று பேசினால் மக்கள் கிட்ட எப்படி எடுபடும்., கதை முடிந்து போய்விட்டது கதம் கதம் அவ்வளவு தான். எங்க திமுக கூட்டணி சிறப்பான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் தமிழ்நாட்டில் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் என்பது 100 க்கு 100 நிரூபணம் ஆகிவிட்டது என்றார்.
இதையும் படிங்க: பிரேமலதாவின் சிறப்பான முடிவு... வலுவான கூட்டணி... செல்வப் பெருந்தகை வரவேற்பு..!
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் தேமுதிக... அரசியல் எதிரிகளின் அடிவயிறு எரியும்..!! - திருமா. தாக்கு..!!