×
 

ஸ்டன் ஆன பெரம்பூர்... கையில் தராசுடன் வந்த வேட்புமனு தாக்கல் செய்த திலகபாமா... ஷாக்கிங் காரணம்...!

இன்று பெரம்பூர் தொகுதி பாமக வேட்பாளரான திலகபாமா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளரும், கவிஞருமான திலகபாமா களமிறங்குகிறார். பாமகவில் நன்கு பிரபலமானவர். அக்கட்சியில் ராமதாஸ்  - அன்புமணி இடையே பிரச்சனை வெடித்த போது அன்புமணி பக்கம் நின்றதோடு, “அன்பு தானே எல்லாம்” என ராமதாஸுக்கு அறிவுரை கூறியவர். கடந்த 2012ம் ஆண்டு நடந்த ஆத்தூர் சட்டமன்ற தேர்தலில் ஐ.பெரியசாமியை எதிர்த்து களமிறங்கிய திலகபாமா 30 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் களமிறங்கிய திலகபாமா கணிசமான வாக்குகளைக் கைப்பற்றினார். 

அதனால் தான் திமுகவின் கோட்டை, ஸ்டார் தொகுதி என பரபரப்பாக பேசப்படும் பெரம்பூர் தொகுதியில் பாமக வேட்பாளர் திலகபாமா அதிமுக கூட்டணிக்காக களமிறக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ல் தொடங்கி, ஏப்ரல் 6-ம் தேதியுடன் முடிகிறது. 

இதனிடையே, இன்று பெரம்பூர் தொகுதி பாமக வேட்பாளரான திலகபாமா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் வேட்புமனுவை வைத்து வழிபாடு நடத்திய திலகபாமா, அங்கிருந்து தனது ஆதரவாளர்களுடன் கையில் கையில் தராசுடன் ஊர்வலமாக சென்றார். 

இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம்… தூக்குல போடுங்க..! சிபிஐ வாதம்..!!

நீதி வேண்டும் ஊழலுக்கு எதிராக நீதி வேண்டும், கிடைக்காத சமூக நீதிக்கு நீதி வேண்டும், பெரம்பூரில் குப்பைக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு நீதி வேண்டும், பாலியல் வன்கொடுமை இல்லா சமூகம் வேண்டும், போதைப்பொருள் இல்லா பெரம்பூர் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக தராசுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததாக தெரிவித்தார். 

பாமக மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக வந்த திலகபாமா வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் அமைந்துள்ள பெரம்பூர் தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

இதையும் படிங்க: என்னப்பா ஆச்சு..? திருச்சியில் போலீஸ் வாகனம் மோதி கீழே விழுந்த நபர்... பதறி ஓடிய விஜய்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share