அந்த கூட்டணி நீடிக்குமா? எங்க கூட்டணியை எதிர்க்க ஆளே இல்லை... அடித்து சொன்ன திருமாவளவன்!!
அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்குமா என்பதே தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மே 31 ஆம் தேதி வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற இருந்த மதச்சார்பின்மை காப்போம் பேரணி வருகின்ற ஜூன் 14ஆம் தேதி நடைபெறும். சிப்காட் தொழிற்பேட்டையின் காரணமாக காற்று, குடிநீர் உள்ளிட்டவை மாசு அடைந்து பொதுமக்களுக்கு பல்வேறு விதமான உடல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, முதலமைச்சரிடம் கோரிக்கையை முன் வைப்போம். நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். திமுக கூட்டணி மட்டும் தான் வடிவம் பெற்ற வலுவான அணியாக உள்ளது. தமிழ்நாட்டில் திமுகவை எதிர்க்கும் அணி இதுவரை உருவாகவில்லை. அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்குமா என்பதே தெரியவில்லை.
இதையும் படிங்க: ஒப்பந்ததாரரிடம் அரிவாளை ஓங்கிய EX. எம்.எல்.ஏ., பூமி பூஜை விழாவில் பதற்றம்!
விஜய் என்ன செய்யப்போகிறார் என்றே தெரியவில்லை. விசிகவை பொறுத்தவரை நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். அதில் தொடர்வோம். அதில் எந்த ஊசலாட்டமும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறோம். டாஸ்மாக் ஊழல் என்பது ஒரு கற்பிதம்.
வேண்டுமென்றே களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என திமுக அதில் ஊழல் நடந்திருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை" எனத் தெரிவித்துள்ளார். திருச்சியில் வருகிற 31 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த விடுதலை சிறுத்தைகள் பேரணி ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். "மதச்சார்பின்மை காப்போம்" என்ற பெயரிலான பேரணி ஜூன் 14ஆம் தேதி நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கையில் உதயநிதி, அன்பில் மகேஷ் TATTOO... ஏழைப் பெண்கள் தான் டார்கெட்! திமுக நிர்வாகி மீது இளம்பெண் பகிர் குற்றச்சாட்டு..!